பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரையேற்றும் உமையவள் 37

அன்னை என்ன சோதனை செய்தாலும் இந்த உறவு விடாது. தடுத்தாட் கொண்ட அன்ன கைவிட்டு விடுவாளா? சிற்றறிவுடைய மனிதன் மனப்போக்குத்தான் இன்னதென்று உறுதியாகச் சொல்லமுடியாது. அன்னை இயல்பு அது அல்லவே! அவள் எப்படியும் காப்பாற்று

· Elf FT GYI .

ஆண்டு கொண்ட உரிமை இருக்கிறது. அதன. மறந்து அதற்கு விரோதமாகப் பக்தன் ஏதாவது செய்தா லும் அன்னை விடமாட்டாள். குழந்தைக்கு நோய் வந்து விட்டது; தாய், இது என் குழந்தை அன்று' என்று சொல்வானா? பைத்தியம் பிடித்துவிட்டது; தாயையே அடிக்க வருகிறது. அப்போது, இவன் என் குழந்தை அல்ல’’ என்று சொல் வாளா? சொல்ல மாட்டாள். தன் வியிற்றில் பிறந்த பிள்ளை என்ற பாசம் எந்த நிலையிலும் விடாது.

உலகிலுள்ள் மனிதத்தாய்க்கே இவ்வளவு வாத் லல்யம் இருக்கும்போது மகாமாதாவாகிய அபிராமி, நீ எனக்குப் பிள்ளை அல்ல' என்று உதறிவிடுவாளா?

அவள் நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காகத் துன்பங். களைத் தருகிருள். அதனுல் அல்லற்பட்டு, ஐயோ, அம்பிகை என்னைக் கைவிட்டு விட்டாளே!' என்று சொல்வது முறையன்று. நாம் அவளை மறந்தாலும் அவள் நம்மை மறப்பதில்லை. நமக்காகவே பல திருவிளையாடல் களேச் செய்திருக்கிருள்; இனியும் செய்வாள்.

பக்தன் என்ன செய்தாலும் அதனால் வெறுப்படை யாமல், ஆண்டு கொண்ட உரிமைபற்றி அவனைக் காப்பாற் றும் கருணைப் பிராட்டி அவள். 'பொல்லாத குழந்தை; இவனைச்சிறையில் அடையுங்கள்' என்று எந்தத் தாயாவது போலீஸ்காரனுக்குச் சொல்வாளா? . . ."