பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. மாலை பூண்ட மலர்

ஆகவே பக்தன் என்ன செய்தாலும், தனக்குத் துன்பத்தை உண்டாக்கும் காரியம் இது என்று அறியாமல் எதைச் செய்தாலும், அவனைக் காப்பாற்றும் கடப்பாட்டை உடையவள் அன்ன. -

'நான் எப்படிப் போனலும் யாருக்கு என்ன?' என்று வெறி மூண்டு ஒடிப் போய்க் கப்பலில் ஏறித் திடீர் என்று நடுக்கடலில் போய் விழுந்து விடுகிருன். அப்போது யார் என்ன செய்யமுடியும்? ஆனாலும் அன்னை அங்கே வந்து பாதுகாத்துக் கரையேற்றுவாள். அவளுக்குத் தெரியாமல் எதையும் செய்யமுடியாது. ஏனென்ருல், அவள் இல்லாத இடமே இல்லை. அண்டபிண்டமெல்லாம். நிறைவாகிப் பரந்திருக்கும் ஏக வஸ்து அவன்.

தன்னை நம்பினவர்களை எந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவது அபிராமியின் திருவுள்ளம். அந்த ஆபத்துத் தானே வந்தாலும் அவர்களாக வருவித்துக் கொண்டாலும் எப்படி இருப்பினும் அவள் அதை நீக்கியருள்வாள். :

குழந்தை தெரியாமல் குழியில் விழப்போகிறது; விளக்கைப் பூ என்று எண்ணி அதைப் பிடிக்கப்போகிறது. தாய் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாளா? மறுகணமே. ஓடிவந்து தடுப்பாள்; அல்லலில் அகப்படாமல் காப்பாற்று. வாள். அவளாவது, வேறிடத்தில் இருந்தால் தன் குழந்தை, யின் போக்கைக் காணமுடியாது. அருகில் இருந்தாலும் சோர்ந்திருக்கலாம். சில சமயங்களில் அவள் சென்று. தடுப்பதற்குள் காரியம் மிஞ்சிப்போய் விடலாம். இவை யெல்லாம் மானிடத்தாயின் திறத்தில் சாத்தியமாகலாம். தெய்வத்தாயாகிய அபிராமிக்கு இத்தகைய குறைபாடு ஏதும் இல்லை. அவள் எப்போதும் விழித்துக்கொண்டே இருப்பவள். தேவர்களே இமையாமல் விழித்திருப்பவர்கள். என்ருல் அம்பிகையைச் சொல்லவேண்டுமா? -