பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மாலை பூண்ட மலர்

அவர்களுடைய நெடும்பயணத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கும்படி ஆகிவிடும். கடுகி நடந்து கால் இளைத்து மீண்டும் மீண்டும் ஒவ்வோர் ஊராகச் சென்று பிச்சை வாங்கிக் காலங்கழிக்கும் ஏழை ஒருவனுக்கு ஒரு மாளிகை யைக் கட்டிக்கொடுத்து, உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் குறைவின்றி ஏற்பாடு செய்துவிட்டால், அவனுடைய அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவான். அப்படித் தான் ஜீவர்கள் அடையவேண்டிய லட்சியத்தை அடைந்து விட்டால் மறுபடியும் யாத்திரை பண்ணவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

மிகச் சிறந்த லட்சியத்தைப் பெற்ற வழியில் இறங் கினவர் அபிராமிபட்டர், அந்த லட்சியம் நிச்சயமாகக் கைகூடும். ஆகவே மறுபடியும் பிறந்து பயணத்தைத் தொடரவேண்டிய நிலையும் இனி ஒழிந்தது. இதையும் சொல்கிருள். இனி நாங்கள் பிறக்கவேண்டிய அவசியம் இல்லே. பிறவா நெறியிலே புகுந்துவிட்டோம். எப்படி எங்கள் ஆராய்ச்சிக்குரிய சமயங்கள் வேறு இல்லையோ, அப்படி இனி எங்களை ஈன்றெடுக்கும் தாயும் இல்லை என்று அழகாகச் சொல்கிரு.ர்.

இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்ஃப்: ஈன்றெடுப்பாள்

- ஒரு தாயும் இல்லை.

இறைவியின் அருள் பெறுவதற்குமுன் ஆசைக் கடலில் அழுந்தி வாழ்ந்துவந்தேன். மூவாசைகளாலும் உள்ளம் மயங்கியது. அந்த மூவாசைகளிலும் மிகக் கடுமையாகப் பற்றி விடாமல் இருந்தது பெண்ணுசை. அதிலிருந்து எப்படி மீளப்போகிருேம் என்று ஏக்கம் அடைந்து கிடந்தேன். இப்போது அருள் வலிமை கிடைத்துவிட்டது. இனி அந்த ஆசைக்கு இடம் இல்லை. இதுவரைக்கும் பட்ட் பாடு போதும். மூங்கிலப் போன்ற தோளையுடைய மகளிர்மேல்