பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மாலே பூண்ட மலர்

யமன் வந்து அழைப்பான்; அதனுல் நான் துன்புறும போது உன்பால் ஓடிவந்து அன்னேயே என்பேன்’ என்று சொல்வதில், ஓடிவருதல் என்பது விரைவில் மனத்தால் பற்றிக் கொள்வதையே குறிக்கிறது. அஞ்சிய குழந்தை அன்னையிடம் ஓடி வருவது போன்ற நிலை அது.

"அன்னையே! நீ தான் சரணம்' என்றுகூடச் சொல்ல வரவில்லை. அந்த வேகத்தில், 'அம்மா!' என்று கூவுவதை யன்றி, தன் நிலையை விரித்துக் கூறும் ஆற்றல் இராது. அச்சம் நாவைக் கட்டிவிடும். அதனல் ஒன்றும் குறை இல்லை. அன்னைக்குத் தெரியாதா வந்த அன்பனுடைய நிலை? குறிப்பால் யாவும் உணரும் பேரருளன்னை 'அம்மா' +. என்று கதறும் வரையிலுங்கூடப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாள். இந்தச் சமயத்தில் நம்மை எண்ணும் பக்குவம் இவனுக்கு இருக்கிறதே! என்று மகிழ்ந்து அவளும் ஒடி வருவாள். ஆம்! ந்ாம் ஒடிச் செல்லும் வேகத் தைவிட அவள் நம்மை நாடி ஒடி வரும் வேகம் அதிகமாகத் தான் இருக்கும். கீழே விழுந்து காயம்பட்ட குழந்தை எழுந்து ஓடிவரும் வேகத்தைவிட, அந்தக் குழந்தையை அணைக்க ஓடிவரும் அன்னேயின் வேகம் மிகுதியாக இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? நாம் அச்சத்தினுல் ஒடுகிருேம்; அது பயவேகம்; அம்பிகையின் வேகமோ கருணை வேகம். - • ,

காலனல் வரும் அச்சத்தைப் போககும் பேராற்றல் உடையவள் அன்னேயென்பதைப் பலகாலும் சொல்லுகிருர் அபிராமி பட்டர். காலஹந்த்ரீ, ஸ்ர்வ் ம்ருத்யு நிவாரணி. ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜன விச்ராந்தி தாயினி (லலிதா சசிகர நாமம், 537, 552, 851) என்னும் அம்பிகையின் திரு நாமங்கள் இந்த உண்மையைப் புலப்படுத்தும்.

அஞ்சிய குழந்தை அம்மா என்று ஒடுவது இயற்கை. நம் உடம்பு வளர்ந்திருப்பதனால் கு ழ ந் ைத ப் பருவத்