பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயே சரணம் 65

லலிதா சகசிரநாமத்தில், காமேச்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபணஸ்தனி' என்பது ஒரு திருநாமம். காமேச்வர. ருடைய காதலென்னும் ரத்தினத்துக்கு எதிரே வழங்கும் மணிகளாக உள்ள தனங்களையுடையவள்" என்பது அதன் பொருள். அந்தத் திருநாமத்தை எண்ணியே அபிராமி பட்டர் இப்படிப் பாடியிருக்கிருர். பின்னும் 42-ஆம் பாடலில், 'கொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம்கொண்ட நாயகி" என்று பாடுவார். தக்கயாகப் பரணியில் ஒட்டக்கூத்தர், 'பாகன் அகங்குழைவித்த பவித்ர பயோதரி!' (74) என்று பாடுவார். இவ்வாறு எம்பொருமான் தெய்வக்காதல் அம்மையின் நகில்மேல் படர்வதைக் குமரகுருபர சுவாமிகள்.

" தார்கொண்ட மதிமுடி ஒருத்தன் திருக்கண்மலர்

சாத்தக் கிளர்ந்துபொங்கித் -

தவழும்இள வெயிலும் மழ நிலவும் அள வளவலால்

தண்ணென்று வெச்சென்றுபொன் ... "

வார்கொண் டனந்தமுலை மலை வல்லி கர்ப்பூர

வல்லியபி ராமவல்லி'

என்று மீட்ைசியம்மை பிள்ளைத்தமிழில் பாடுகிரு.ர்.

அம்பிகைக்குச் சியாமளே என்பது திருநாமம்; அது தமிழில் யாமளே என வரும். அவள் மிகவும் மென்மை யானவள்; அதனல் கோமளாங்கி, கோமளாகாரா என்ற திருநாமங்களைப் பெற்ருள். இந்த இரண்டையும் இணைத்து,

யாமளேக் கோமளமே!

என்று அபிராமிபட்ட்ர் துதிக்கிருர். வன்மையான சித்தத் தையுடைய சிவபெருமானக் குழைவிக்கிறவள் மெல்லிய லான அம்பிகை. நீரால் கல் கரைவது போன்றது. இது. அந்த மெல்லியலே காலனது பயத்தையும் போக்கவல்லவள். காலன் அஞ்சும்படி வந்து அருள் செய்கிறவள் அவள்

மாலை-5