பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு இடங்கள்

அம்பிகையினிடம், காலன் வரும்போது உன்னையே சரணம் புகுவேன்' என்று கூறிய அபிராமிபட்டர். அன்னையின் பெருங்கருணையை நினைத்துப் பார்க்கிரு.ர். அவள் தன்னைச் சரணம் அடைபவர்களுக்கு எல்லா நலங் களையும் அருள்கிறவள். இகலோகத்தில் வளவாழ்வை அருள்வாள்; பிறகு சுவர்க்கபதவியை வழங்குவாள்; அப்பால் முத்தியையும் கொடுப்பாள். -

எல்லா வகையான போகங்களுக்கும் உறைவிடம் அமரர் உலகம். இந்திரபோகம் என்று போகத்தின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் சொல்வது வழக்கம். வானுலகம் அமுதம் உண்டு குறை நிரம்பிய தேவர்கள் வாழும் இடம். அதனை அம்பிகை அருளுவாள். -

மிகவும் கருணையையுடைய தாய் ஒருத்தி தன் குழந்தை களுக்குத் தனக்குரிய பெரிய மாளிகையை, குழந்தைகள் செளக்கியமாக இருக்கட்டும்' என்று கொடுத்துவிட்டுத் தான் எங்கோ சின்னச் சின்ன இடங்களில் சென்று தங்குகிருள். அவளுடைய அன்பை எவ்வாறு சொல்வது! தன் நலத்தைக் கருதாமல் தன் குழந்தைகளின் நலத்தைக் கருதுவதுதானே தாயின் இயல்பு: அந்தத் தான்யப்போல இருக்கிருள் அபிராமி என்று தோற்றும்படி நயமாகப் பாடுகிருர் பட்டர். தன்னை அண்டிச் சரணமென்று புகுந்தவர்களுக்குச் சகல செளபாக்கியங்களும் உள்ள தேவலோகத்தை அளித்துவிட்டுத் தான் போய் வெவ்வேறு. சிறிய இடங்களில் இருப்பாள் என்று கூறுகிரு.ர். ஒருவனுடைய முகத்திலும் மற்ருெருவனுடைய மார்பிலும் பின்னும் ஒருவனுடைய பாகத்திலும் மலரிலும்