பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு இடங்கள் 69

முதலிய நல்ல கதிகளை வழங்குபவள் என்பதை, 'ஸ்த்கதி ப்ரதா என்ற திருநாமமும், பெரிய ஸாம்ராஜ்யங்களையே அளிப்பவள் என்பதை, ஸாம்ராஜ்ய தாயினி' என்ற

திருநாமமும் விளக்குகின்றன.

இவ்வாறு தன்னைச் சரணம் அடைந்த பக்தர்களுக்கு இன்ப வாழ்வை அருளும் எம்பெருமாட்டி எங்கே இருக்கிருள்? அவள் தனக்கென்று அமைத்துக்கொண்ட இடம் எல்லாவற்றிற்கும் மேலானது. அவளுடைய இராசதானி அது. ஆல்ை அங்கே தங்கிவிட்டால் பிரபஞ்ச காரியங்கள் நடைபெற வேண்டுமே! அதன் பொருட்டு வெவ்வேறு இடங்களில் தான் போய்த் தங்கி வெவ்வேறு காரியங்கள் நிகழும்படி செய்கிருள்.

பிரபஞ்சத்தை உண்டாக்கி உயிர்களை அங்கே குடியேற்றவேண்டும். இந்தப் படைப்பென்னும் தொழிலைப் .பிரமணிடம் ஒப்படைத்திருக்கிருள் இறைவி. அவன் சுதந்தரனாக அதைச் செய்யும் ஆற்றல் இல்லாதவன். அவனுக்குத் துணையாகக் கலைமகளை அளித்திருக்கிருள். கலைமகள் அறிவின் திருவுரு, அறிவு இல்லாவிடின் எதையும் படைக்க இயலாது. ஆகவே, படைப்புத் தொழிலையுடைய நான்முகனுக்கு அறிவாற்றலின் உரு வாகிய கலைமகள் துணைவியாக விளங்குகிருள். பிரம னுக்குப் படைக்கும் தொழிலை வகுத்து அவனுக்குக் கலைமகளாகிய துணைவியை அருளுவதோடு நிற்பதில்லை அன்னே. அந்தக் கலைமகளினூடே இருந்து இயக்குகிருள். அதனுல் கலைமகளே அவளுடைய மூர்த்திகளில் ஒன்று என்று சாஸ்திரங்கள் சொல்லும். ப்ராம் ஹி (657), * ஸரஸ்வதி (704) என்ற திருநாமங்கள் அன்னைக்கு இருப்பதை நினைத்தால் இந்த உண்மை வெளியாகும். - புண்டரிக வீட்டிற் பொலிந்து மதுரச் சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம்' என்று