பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மாலை பூண்ட மலர்

மீளுட்சியம்மை பிள்ளைத்தமிழ் கூறுவதும் இங்கே. உணரத்தக்கது.

படைப்புத்தொழில் நடப்பதற்கு இவ்வாறு உதவி புரியும் அம்மை, அடுத்து நடக்கும் காப்புத்தொழிலுக்கும். ஆவன செய்கிருள். அதனைப் புரிபவர் திருமால். மக்களைப் பாதுகாப்பதற்குப் பொருள் இன்றியமையாதது. பொருளின் வடிவாக இருப்பவள் திருமகள். திருமால் கெளஸ்துபமணியை அணிந்த தம் திருமார்பில் திருமகளேத் துணையாக வைத்திருக்கிரு.ர். பேரழகியாகிய திருமகள் மலர்மாலையும் மணியும் அணிந்த திருமால் மார்பில் இனிது வீற்றிருக்கிருள். அந்தத் திருமகளினுள்ளே இருந்து: அவள் மயமாக நின்று சகல ஐசுவரியங்களையும் தருகிறவள் பராசக்தி. அதனுல் அவளைத் திருமகள் என்றே வழங்கு, வதுண்டு. அபிராமிபட்டர் மூன்ரும் பாடலில், திருவே' என்று அழைத்தார். திருமகளைக் குறிக்கும் ரமா (313), வைஷ்ணவி (892) என்னும் திருநாமங்களை அன்னைக்கு. உரியனவாக லலிதா சகசிரநாமம் கூறுகிறது.

சரசுவதியாகப் பிரம்மாவின் முகத்திலும், திருமகளா கத் திருமாலின் மார்பிலும் எழுந்தருளியிருக்கும் அபிராமி சிவபிரானுடைய ஒரு பாகத்தில் குடிகொண்டு ஐந்தொழில் களையும் நடத்துகிருள். - . . . .

'உறைகின்ற நின்திருக் கோயில்கின் கேள்வர்

ஒருபக்கமோ (20) -

என்று முன்பும் பாடினர். ஆகவே மூன்று மூர்த்தி களுடைய திருமேனியில் சென்று நின்று அவர்களால் ஆகும் காரியங்கள் இனிது நடக்கும்படி அருள் பாலிக்கிருள் தாய். - - - - -

தான் போய் இருக்கும் சதுர்முகமும்,

பைந்தேன் அலங்கல் பருமனி ஆகமும்,

- பாகமும் .