பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு இடங்கள் 71,

இவற்ருேடு அம்மை போயிருக்கும் வேறு இடங்களையும். சொல்ல வருகிருர். அவள் தாமரை மலரில் வீற்றிருக்கிருள். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான தாமரை மலர்களில் வெவ்வேறு உருவங்களில் எழுந்தருளியிருக்கிருள். பிரமனுடைய உருவத்தில் தாமரை மலரில் இருக்கிருள்: அதளுல் அவளுக்கு, ப்ரஹ்மரூபா (265) என்ற திருப்பெயர் அமைந்தது. உடம்பிலுள்ள ஆறு ஆதாரங் களிலுள்ள தாமரைகளில் அவள் வெவ்வேறு கோலத்துடன், வீற்றிருக்கிருள். இதை 20-ஆம் பாடலி ன் உரையில் பார்த்தோம். ஆதாரங் கடந்த பிரமரந்தரத்தில் ஆயிர இதழ்த், தாமரையில் அவள் சோதிவடிவாய் இருக்கிருள். அதனுல் ஸஹஸ்ராராம்புஜ ரூடா (105), ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா (528) என்ற திருநாமங்கள் அவளுக்கு உரியவை ஆயின. பொதுவாகப் பத்மாஸ்ளு (278) என்ற திருநாமமும் உண்டு.

உலகம் பகலில் சூரியல்ை ஒளி பெறுகிறது. இரவில் சந்திரனல் ஒளிபெறுகிறது. காலந் தவருமல் இந்த இரண்டு சுடர்களும் தங்கள் செயலைச் செய்துவருகின்றன. இவை தம் நிலை தவறிலுைம் காலந்தவறிலுைம் பிரபஞ்சத்தின் போக்கில் பெரிய மாறுதல்களும் து ன் பங் க ளு ம் உண்டாகும். இந்த இரண்டு மண்டலங்களும் வழுவாமல் நின்று ஒளி வழங்குவதற்குக் காரணம் இவற்றினுாடே அன்னை இருந்து இயக்குவதுதான். இவை எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பம்பரம் சுழன்று கொண்டிருப்பதைப் பார்க்கும் குழந்தை உண்மை தெரியாமல் அது தானே சுழல்கிறது என்று நினைத்துக் கொள்கிறது. அதைப்போலவே அறியாதவர்கள் சூரியன் முதலிய கிரகங்கள் தாமே சுழல்கின்றன, அது இயற்கை என்று எண்ணுகிரு.ர்கள். பம்பரத்தைச் சுழற்றிவிட்ட பையன் மறைவில் இருக்கிருன். அவ்வாறே இவற்றை