பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாலை பூண்ட மலர்

தலை குனிவதில்லை; பணிவதில்லை. பணிந்தால் தானே பயன் கிடைக்கும்? யார் தலை அடக்கத்தால் குனிந்திருக்கிறதோ அந்தத் தலையில் அம்பிகை தன் திருவடியை வைக்கிரு ஸ். அவர்கள் தலைபணிந்து நிற்கிற நிலையே அன்னையின் திருவடி இங்கே பதியவேண்டும் என்ற குறிப்பைக் காட்டுகிறது. அகந்தையினுல் நிமிர்ந்த தலையில் அவள் அடியை வைக்க மாட்டாள். - -

அரசன் ஒருவனுக்கு முடிசூட்டும்போது பெரியவர்கள் சூட்டுவார்கள். இராமனுக்கு வசிஷ்டர் முடி சூட்டினர். முடியைச் சூடிக்கொள்ளும்போது தலைபணிந்து ஏற்பார்கள். இறைவியின் திருவடியோ அகிலலோக சாம்ராஜ்யத்தின் தனிமுடி போன்றது. அதை ஏற்றுக்கொள்ள எத்தனை பணிவு வேண்டும்! அந்தத் திருவடி நம் தலையிலும் பதியுமா என்று ஏங்கி, அகந்தை அழிந்து உருகி நிற்பது அடியார் இயல்பு. அதுவே பெருந்தவம். அதன் பய்கை அவர்கள் தலைகள், முடி பெற்ற தலைபோலச் சிறப்பை அடைகின்றன: இறைவியின் அடியைச் சூடிக்கொள்கின்றன.

இந்தத் தவம் செய்த கூட்டத்தினருள் ஒருவராகிய அபிராமியட்டர், கணக்கற்ற தேவர்களுக்கும் கிடைக்காத பாக்கியம் அல்லவா எங்களுக்குக் கிடைத்திருக்கிறது? வேறு யாருடைய தலையில் அன்னையின் திருவடி பதியும்?' என்று எக்களிப்போடு சொல்கிரு.ர். -

அடியார்களையல்லாமல் தேவர்கள் தலையில் அன்னை தன் திருவடி வைப்பதில்லை என்ருலும், தேவர்களுக் கெல்லாம் பெரிய தேவனகிய மகாதேவனுடைய திருமுடி யில் அதனை வைப்பதுண்டு. ஆனல் அது பரமரகசியமான செய்தி. --

எல்லோரும் அறிய அடியார்கள் த்லையின்மேல் அம்பிகை ன் சீறடியை வைக்கிருள். ஆனல் மகாதேவனகிய