பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'94 - மாலை பூண்ட மலர்

யான்ை. போர் என்ருல் அதற்குப் படைகள் வேண்டும். அம்பிகை தன்னுடைய படைத்தலைவர் இருவரை அனுப்பி அந்தப் பெருமாளுேடு பொரச்செய்தாள். அந்தப் படைத் தலைவருக்குத் துணையாக இருவர் சென்றனர். வெற்றி கிட்டியது.

ஆம்; அந்தப் படைத் தலைவர்கள் எம்பெருமாட்டியின் தனபாரங்களே. துணையாக நின்றவர்கள் யார்? அவை அன்னையின் செய்ய வாயும் புன்னகையும். செவ்வாயையும் புன்முறுவலையும் முன்னிட்டுக்கொண்டு துணைநகில்கள் சங்கரனத் துவளும்படி பொருதனவாம். இப்படி அபிராமி பட்டர் பாடுகிருர்,

எட்டுத் திக்கையும் ஆடையாக அணிந்த சிவபிரா னிடம் ஒன்றியிருப்பவள் என்று முன்பு சொன்னவர். இந்தப் பாட்டில் இந்த இன்பப் போரைச் சொல்கிரு.ர்.

அன்னை அபிராமியின் செய்ய வாய் பவளம்போல இருக்கிறது. நன்ருக முற்றி விளைந்த பவளக் கொடி போல மேலுங் கீழும் சிவந்த இதழ்கள் விளங்குகின்றன. அந்த வாய் எம்பெருமானுடைய உள்ளத்தில் எழுச்சியை உண்டாக்குகிறது; வேறு செயலைச் செய்ய முந்தினுல் அதிலே செல்ல விடாதபடி போராடி மயக்குகிறது. அவன் அந்தத் திருவாயையே பார்த்துக் கொண்டிருக்கிருன். அதைப் பார்க்கப் பார்க்க இறைவன் மற்றவற்றை ஒவ்வொன்முக மறந்து வருகிருன். அந்த இதழே போதும், அவனைச் செயலிழந்து அடிமையாக்கிவிட ஆனல் இப்போது மற்ருெரு படையும் முந்துகிறது.

இறைவன் பார்த்துக்கொண்டே இருக்கும்போது பள்ளக் கொடி இரண்டு ஒட்டிற்ைபோல இருந்த இதழ்கள் பிரிகின்றன. இடையே மெல்ல ஒரு வெண்ணிற அழகுப் பொருள் தோன்றுகிறது. அது தோன்றும்போதே அவனு டைய உள்ளத்தைக் குளிர்விக்கிறது. அந்தச் செய்ய வாயி