பக்கம்:மாவிளக்கு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மா விளக்கு

கறுப்பண்ணசாமியைப் பிடுங்கி உடைத்தெறியப் போகிறேன்.”

' என்ன முத்து, பனைமரத்திலே தேள் கடிக்கத் தென்னை மரத்திலே கெறியேறுதே ? . கறுப்பண்ணசாமி என்ன செய்தார் ?” என்று சிரித்துக்கொண்டே கிழவன் கேட்டான்.

"அந்தச் சாமியை நான் அந்தக் காலத்திலே கும்பிடாத காளில்லே. அதை கினைக்காத நேரமில்லை. அப்படி இருந்த எனக்கு இப்படி கேர்ந்ததே ? அப்போ அது சாமியா ? அதற்குக் கண்ணிருக்குதா ?

கிழவன் மறுபடியும் சிரித்தான். - ' என்ன தாத்தா. உங்களுக்கு இதெல்லாம் சிரிப்பா யிருக்குதா ?”

கிழவன் சிரிப்பை அடக்கிக் கொண்டான். “சரி யப்பா, சாமியை உடைப்பது ரொம்ப சுலபம். சாமி உன்னைத் தடுக்கவா போகுது? நீ கும்பிட்டாலும் சும்மா இருக்கும் ; கல்லேத் தூக்கிப் போட்டாலும் சும்மாதான் இருக்கும். அதன் சங்கதியே நமக்கு விளங்காது. சரி, அப்புறம் என்ன செய்யப் போகிருய் ?”

முத்துசாமிக்குக் கிழவன் பேச்சு எரிச்சலை உண்டு பண்ணியது. ' அப்புறமா ? அந்த வேலுச்சாமிக் கவுண்டனை நாளைக்கு ராத்திரியே பலி வாங்கிவிட்டு உங்களைப்போலவே இங்கே வரப் போகிறேன்.”

“ இந்தத் தீர்மானத்தை மாற்றவே மாட்டாயா, முத்து ?”

"தாத்தா, நீங்கள் ஆயிரக்தடவை என்னிடம் இப்படிக் கேட்டாகிவிட்டது. கானும் திருப்பித் திருப்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/10&oldid=616006" இலிருந்து மீள்விக்கப்பட்டது