பக்கம்:மாவிளக்கு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 மா விளக்கு

அதற்காகவே இன்று நான் புறப்பட்டேன். இந்த ஆசாமியுடன் தனியாக முதல் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்யத் தற்செயலாக கேர்ந்தது. பேச்சு எப்படியோ ரயில் திருட்டைப்பற்றி ஆரம்பித்தது. திருடர்கள் வந்தாலும், அவர்கள் பயமுறுத் தின லும் தனக்குப் பயமுண்டாகாது என்ற தோரணையிலே இவர் பேசினர். இவரே ஒரு திருடன்தானே என்று எனக்குப் பயமுண்டாகிவிட்டது. நான் துங்கியபிறகு எனக் கேதேனும் தீங்கு செய்துவிட்டால் என்ன செய்வ தென்று பயமடைந்தேன். இவர் நடந்துகொண்ட மாதிரியில் என்னுடைய பயம் இன்னும் அதிகரித்தது. இந்த ஆசாமி திருடன்தான் என்று நான் நிச்சயமாக கம்பினேன். அதல்ை. இவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காவே இவரை மிரட்டுவதைப்போலப் பேசினேன். இவர் அப்படித் திடீரென்று மூர்ச்சை போட்டு விழுவாரென்று கான் எதிர் பார்க்கவில்லை. அத்தனை கோழை என்று எனக்கு முதலில் தெரியாது போயிற்று. இவர் மூர்ச்சைபோட்டு விழவே எனக்கு வேருெருவிதமான பயம்பிடித்துக் கொண் டது . இவரைக் காப்பாற்றும் கல்லெண்ணத்தோடுதான் கான் அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுத்தேன். இதுதான் நடந்த விஷயம். உண்மையில் என் பெயர் சையத் காதர் அல்ல. யாருக்கும் தெரியாமல் சென்று வாழ்க்கையை நேருக்கு நேராகக் காணவே இந்த வேஷம் போட்டேன். என் பெயர் சுயதரிசனம் தான்” என்று கூறிக்கொண்டே அவர் தம் பொய்த் தாடி மீசைகளையும் எடுத்தார்.

‘ ஆ, என் நண்பன் சுயதரிசனமா ? நானும் உன்னேப்போலத்தாண்டா வந்தேன் ” என்று கூவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/106&oldid=616201" இலிருந்து மீள்விக்கப்பட்டது