பக்கம்:மாவிளக்கு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0. மா விளக்கு

“ கேவலம் ஒரு பெண்ணை இப்படிப் பயமுறுத்து வது சாமர்த்தியமானல், அப்படியே செய்யுங்கள் !”

" நீ ஒரு திருடி உண்மையைச் சொல்லாவிட்டால், உன்னே என்ன செய்வேன் தெரியுமா ?”

" ஒரு பெண்ணேயா இப்படிப் பேசுகிறீர் பெண் பிள்ளையிடத்திலா இப்படி வீரம் பேசுவது ?”

' பெட்டியில் என்ன தேடிக்கொண் டிருந்தாய் ? ஒன்றையும் ஒளிக்காதே சொல். ஒளித்தால்.......”

இந்தத் தடவை அவர் இதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை ; துப்பாக்கியை மட்டும் கொஞ்சம் கீழும் மேலும் ஆட்டிக் காண்பித்தார். ஆனால், இதற்கு ஒன்றும் பதில் இல்லே.

' சொல்லுகிருயா ? இல்லாவிட்டால் ஸ்டேஷனி

லிருந்து இரண்டு பேரைக் கூப்பிட்டு விலங்கு போடச் சொல்லட்டுமா ?”

அங்கே உண்டான சத்தத்தால் தூக்கம் கலேக் தெழுந்த குமாஸ்தா சின்னசாமி இந்தத் தருணத்தில் வேகமாக உள்ளே நுழைந்தான். துழைந்ததும், "ஐயோ வேண்டாம் ; போலீஸைக் கூப்பிடவேண்டாம் !’ என்று கெஞ்சும் ஆண்டாளின் பரிதாபக் குரல் அவன் காதில் விழுந்தது.

சின்னசாமி திடுக்கிட்டுப் போய்விட்டான். கொடுர மான பார்வையுடன் சுழல் துப்பாக்கியை நீட்டிக்கொண் டிருந்த தன் எஜமானனே ஐயத்தோடு நோக்கினன். மறு நிமிஷம் அவன் பார்வை ஆண்டாள் மேல் விழுந்தது. கடுமையான வெயிலில் சோர்ந்து தொங்கும் இளந் தளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/112&oldid=616214" இலிருந்து மீள்விக்கப்பட்டது