பக்கம்:மாவிளக்கு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மா விளக்கு

' பத்தாயிரம் ரூபாய் என் தங்தையால் கொடுக்க முடியும் ஆனால், அவர் இப்படி அநியாயமாக ஒரு காசு கொடுக்கவும் மறுக்கிரு.ர். வழக்கில் சம்பந்தப் படுத்தினுல் சிறைக்குப் போகத் தயார் என்று பிடிவாத மாகக் கூறிக்கொண்டிருக்கிரு.ர்.

இந்தச் சம்பவங்களெல்லாம் எனக்குக் கடித மூலமாகத் தெரிந்தன. கான் இங்கு ராணி மேரி கல்லூரியில் வாசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு எப்படியாவது என் தகப்பனரை விடுவிக்கவேண்டும் என்ற உறுதி உண்டாயிற்று.

“ விஷயம் இப்படி இருக்கும்பொழுது இவர் தமக்கு ஒரு வேலேக்காரி வேண்டும் என்று பத்திரிகையில் விளம் பரப் படுத்தினர். அதைப் பார்த்த கான் வேலேக்காரியாக அமர்ந்தால் அந்தக் கடிதங்களைக் கைப்பற்றச் சமயம் கிடைக்கும் என்று கினேத்து அப்படியே செய்தேன். என்னே யாரென்று இவர் கண்டுகொள்ள முடியவில்லை.

  • கடிதங்களே யெல்லாம் இரும்புப் பெட்டியில் வைத்திருப்பதைக் கொஞ்ச நாட்களில் தெரிந்துகொண் டேன். இன்று இரவு 9-மணிக்கு இவருக்குப் பால் கொண்டு வந்தபொழுது இரும்புப்பெட்டியின் சாவி மேஜைமேலே கிடந்தது. இவர் அதைக் கவனிக்காமலே படுத்துக் கொண்டார். அதைக் கண்ட நான் சுமார் ஒரு மணிக்குப் பெட்டியைத் திறந்து கடிதங்களை எடுக்க முயன்றேன்.”

இங்கு அவள் குரல் மாறியது அவள் குழறிக் குழறிப் பேசலாள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/116&oldid=616222" இலிருந்து மீள்விக்கப்பட்டது