பக்கம்:மாவிளக்கு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 26 மா விளக்கு

இந்தச் சமயத்தில் என் தகப்பனர் உள்ளே நுழைங் தார். என் கல்யாண விஷயமாக ஜாதகம் பார்த்துவிட்டு வந்திருக்கிரு.ர். இந்த ஜாதகம் சரியில்லேயடா’ என்று வாயைச் சப்பினர்.

' ஜாதகத்தில் என்ன சரியில்லாது போய்விடும் ? பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சம்மதமால்ை கலியாணம் பண்ண வேண்டியதுதானே ?’ என்ருன் குமரேசன்.

" அப்படியா சே; ஜாதகத்தைப் பார்த்தால் பெண்ணின் வருங்காலமெல்லாம் தெரியுமல்லவா ? அது நன்ருக இருந்தால்தானே அந்தப் பெண்ணே ஏற்பாடு செய்யலாம் ?’ என்ருர் தங்தை.

ஒருவனுடைய எதிர் காலத்தைப் பார்க்க முடியுமா ?” என்ருன் குமரேசன் ஆவலோடு.

ஏன் முடியாது? அப்போ சோதிடமே பொய்யா?” என்ருர் என் தகப்பனர்.

“ ஒகோ, இந்தச் சோதிட சாஸ்திரம் எதிர் காலத்தைப்பற்றிச் சொல்லுகிறதல்லவா ? இதையும் எனது ஆராய்ச்சியில் சேர்த்தால் பயன்படுமா ?” என்று கூறிக்கொண்டே குமரேசன் வெறு வெளியைப்பார்த்துக் கொண்டு கிளம்பிவிட்டான். -

' இவன் யாரடா, மகாக் கிறுக்கன் போலிருக் கிருன் ?’ என்று தகப்பனர் கூறிச் சிரித்தார்.

18-4-44 : குமரேசனைப் பார்த்துப் பல நாட்களாகி விட்டன. ஏனே அவன் வருவதேயில்லே என்று அவன் வீட்டிற்குப் போனேன். அவன் பாலக்காட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/128&oldid=616247" இலிருந்து மீள்விக்கப்பட்டது