பக்கம்:மாவிளக்கு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மா விளக்கு

எனது யந்திரம் மிக நுண்மை வாய்ந்தது, எண்ண அலேகளைக் கொண்டு இயங்குவது.”

- “ ஒகோ, அந்த யந்திரத்தை வைத்துக் கொண்டு, யுத்தம் முடிந்த பத்து வருஷங்களில் வரப் போவதாகச்

சொல்லுகிருயே-அந்த அற்புத உலகத்தைப் பார்க்கப் போகிருயாக்கும் ?

" ஏன் பார்க்கக்கூடாது ? பார் க் க த் தா ன் போகிறேன். அந்த அற்புத உலகம் தோன்றுவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக எனது காலயந்திரமும் வரப்போகிறது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். -

37-3-44 : குமரேசன் ஊரிலில்லை. ஏதோ சில யந்திர சாமான்கள் வாங்கப் பட்டணம் போயிருக்கிருன்.

1-4-44 : பட்டணத்திலிருந்து குமரேசன் கடிதம் எழுதி யிருக்கிருன். சாமான்களேயெல்லாம் வாங்கிக் கொண்டு புதுச்சேரிக்குப் போனம்ை. இங்கே ஒரு அற்புத மனிதரைச் சக்தித்தேன். இது வரை வெளி வராத சில சித்த நூல்கள் ஏட்டுப் பிரதியாக அவரிடம் இருக்கின்றன. அவற்றில் பல ஆச்சரியமான விஷயங்கள் அடங்கி யிருக்கின்றன ’ என்று எழுதியிருக்கிருன்.

9-4-44 : குமரேசன் திரும்பி விட்டான். இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

உலகின் சுகத்திற்கான பல விஷயங்கள் சித்த நூல் களில் இருப்பதாகச் சொன்னன். ' இன்று சித்த நூல் என்று வழங்குபவை யெல்லாம் சித்தர்களால் எழுதப் பட்டவையல்ல. அவர்கள் சொன்னதைக் கேட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/130&oldid=616251" இலிருந்து மீள்விக்கப்பட்டது