பக்கம்:மாவிளக்கு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 30 மா விளக்கு

15.5-44 : குமரேசன் கடிதம் எழுதியிருக்கிருன். விலாசம் ஒன்றும் தரவில்லை. சித்தர்களைப் பார்த்த விபரமும் காணுேம். காடி சாஸ்திரம் அடங்கிய பழைய ஏடுகள் எங்கோ இருக்கின்றனவாம். அவற்றைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதாக எழுதியிருக்கிருன்.

19-5-44 : குமரேசன் திரும்பி விட்டானென்று தெரிந்து அவனைப் பார்க்கப் போனேன். வீட்டில் தானிருந்தான். ஆனால், சந்தித்துப் பேச முடியவில்லை.

திரும்பி வந்ததிலிருந்து யாரிடமும் பேசுவ தில்லையாம். ஏதோ மூலிகைகள் கொண்டு வந்திருக் கிருளும். யந்திரத்தை மாற்றியமைக்கிருளும். என் னென்னவோ செய்கிரும்ை. உணவருந்தக்கூட மற்ற வர்களுடன் கலந்து கொள்வதில்லை. தனது அறை யிலேயே கொண்டுவந்து வைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டிருக்கிருன்.

அவன் தாயாருக்கு இப்பொழுது அவனைப்பற்றிக் கவலே ஏற்பட்டிருக்கிறது. " ஒரு கலியாணத்தைப் பண்ணி வைத்து விட்டால் பேசாமல் வீட்டைக் காத்துக் கொண்டு கிடப்பான் ” என்று தனது-அபிப் பிராயத்தை என்னிடம் வெளியிட்டாள். தகப்பனர் பெரிய வக்கீல். அவருக்கு ஒய்வென்பதே கிடைக்காது இதையெல்லாம் கவனிக்க. மேலும் பையன் சிறந்த ஆராய்ச்சிக்காரகை வேண்டும் என்பது அவர் ஆசை.

38-5-44 : இன்று குமரேசனிடம் பேச முடிந்தது. மிகவும் மெலிந்திருந்தான். தூக்கமில்லாமல் கண்கள் அலுத்துப் பிரகாசமற்றிருந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/132&oldid=616255" இலிருந்து மீள்விக்கப்பட்டது