பக்கம்:மாவிளக்கு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மா விளக்கு

இல்லை. அந்த யந்திரத்திலேயே சதா கவனம். இடை யிடையே ஆழ்ந்த யோசனையில் மெய்மறந்து விடுகிருன்.

31-6-44 : இன்று குமரேசன் ஆராய்ச்சியெல்லாம் முடிந்துவிட்டது. திடீரென்று இப்படி முடியுமென்று நான் கினேக்கவே இல்லே. யந்திரம் தயாராகிவிட்டது. இப்பொழுது முதலில் கான் எதிர் கால உலகத்தைப் பார்க்கப் போகிறேன். பிறகு நீ பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுக் குமரேசன் தனது யந்திரத்திற்குள் நுழைந்தான். அது ஐந்தடி உயரமிருக்கும்.

சிறிது நேரத்தில் ஸ்ஸ்.ஸ்.என்ற இசை பிறந்தது. பல வகையான வர்ணக்கதிர்கள் தோன்றிச் சுற்றிலும் பிரகாசித்தன. மின்சார விசிறி ஓடுவதுபோல் ஒரு சப்தமும் உண்டாயிற்று.

இப்படி ஒரு பத்துப் பதினேந்து கிமிஷம் சென் றிருக்கும். திடீரென்று ஏதோ ஒரு அதிர்ச்சி உண்டானது போல் எனக்குப் பட்டது. குமரேசன் வாய்விட்டு உரக்கக் கத்தினன். ' ஆ இதுவா வரப் போகிற உலகம் ! அணுக்குண்டுப் பிரளயத்தான ?”

அவ்வளவுதான். யந்திரம் கின்று விட்டது. குமரேசன் மூர்ச்சை போட்டு விழுந்து கிடந்தான்.

30-6-44 : குமரேசனுக்கு மூளை குழம்பிவிட்டது. அவனைப் பார்க்க வருகிறவர்களிடமெல்லாம் எதிர்கால உலகத்தைப்பற்றி என்னென்னவோ பிதற்றிக் கொண் டிருக்கிருன். இனி அவனுடைய கோய் தீராது என்று வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/136&oldid=616264" இலிருந்து மீள்விக்கப்பட்டது