பக்கம்:மாவிளக்கு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதன ஆடு 145

வைப்பான். அது அவனுடைய சொத்துத்தானே ? வேறு உடமை அவனுக்கு என்றுமே இருந்ததில்லே.

வீட்டுக்கு எதிரே கொஞ்சம் திறந்த வெளி யுண்டு. கிழவி சாணம் தெளித்துத் தெளித்து அது சமனுகி வாசலாக அமைந்திருந்தது. அதிலே இரண்டு வெள்ளாடுகளே முளையடித்துக் கட்டியிருந்தார்கள். பக்கத்திலே ஆட்டுக்குட்டி ஒன்று துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

பெரிய ஆடுகளில் ஒன்று அதன் தாய். மற்றது சினை ; இன்னும் இரண்டு மாதங்களில் குட்டி போடும்.

சினே ஆடு இரட்டைக் குட்டிகளாகப் போட வேண்டும் என்பது கிழவனுடைய ஆசை.

' இரட்டைக் குட்டிகளோடு இந்த ஆட்டை மகளுக்குச் சீதனம் கொடுத்து விட்டால் என். ஆசை தீர்ந்து போகும் ” என்று கிழவன் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தான்.

" தினமும் வயிருற மேய்க்தால்தான் இரட்டைக் குட்டி போடும். வயிறு வற்றிக் கிடந்தால் எப்படிப் போடும் ? என்பாள் கிழவி.

என்னமோ பார்க்கலாம். என்னலே ஆனவரையில் மேய்க்கிறேன். எதற்கும் அதிர்ஷ்டம் இரு க் க

வேணும் ” என்று கிழவன் சொல்லுவான். - கிழவனுக்கு ஒரு வகையான பக்கவாதம். அதனல் அவனுடைய இடது கால் நேராக வராது. கொஞ்சம் இழுத்தாற்போல் கடப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/147&oldid=616288" இலிருந்து மீள்விக்கப்பட்டது