பக்கம்:மாவிளக்கு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மா விளக்கு

இருந்தாலும் காலேயிலிருந்து மாலே வரையிலும் அவனுக்கு ஓயாத கடைதான். பச்சைத் தழைகளைத் தேடி ஆடுகளே ஒட்டிக்கொண்டு போகவேண்டும். உயர்ந்த கொம்புகளிலே உள்ள தழைகளைத் தன் கையி லுள்ள கொக்கியால் இழுத்துப் பறிப்பான். எப்படி யாவது ஆடுகள் வயிருற மேயவேண்டும் என்பது அவனுடைய நோக்கம். அதனால் அவன் தின் உடலுக்குக் கொடுக்கும் சிரமத்தை அவன் பொருட் படுத்த மாட்டான். -

உச்சிப் பொழுதுக்குக் கிழவன் ஒரு வேப்பமரத் தடியிலே வந்து சற்று இளைப்பாறுவான். அந்த வேளையில் கிழவி ஒரு மண் கலயத்திலே களி கொண்டு வருவாள். அவசரம் அவசரமாக அதைக் கரைத்துக் கிழவனுக்கு ஊற்றிவிட்டு அவள் தன் வேலையைக் கவனிக்க ஒட வேண்டும். அவள் தினமும் சம்பாதிக்கிற கூலிதான் அந்த இரண்டு கிழ வயிறுகளுக்குக் கஞ்சி வார்க்கிறது. ஆடு மேய்ப்பதோடு கிழவன் வேலை முடிந்தது. இது வரை அவன் வளர்த்த ஆடுகளையும் அவற்றின் குட்டிகளையும் வருஷத்திற்கு இரண்டு மூன்ருக விற்றுக் கிழவனும் கிழவியும் தமக்கு வேண்டிய வேட்டி சேலைகளை வாங்கிக் கொள்ளுவார்கள். கிழவி வயிற்றைக் கவனித்துக் கொண்டாள். கிழவன் மானத் தைக் காப்பாற்றின்ை.

தமது ஒரே மகளான வள்ளியாத்தாளேத் தூரன் பாளையம் கந்தப்பனுக்குக் கலியாணம் செய்து கொடுத்த பிறகு இந்தக் கிழத்தம்பதிகளின் வாழ்க்கை இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/148&oldid=616290" இலிருந்து மீள்விக்கப்பட்டது