பக்கம்:மாவிளக்கு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மா விளக்கு

வள்ளியாத்தாளுக்காக அலேகிறேன்” என்று பெருமூச்சு விட்டான்.

' குட்டி ஆட்டை விற்றுப் போடுங்கள். கட்டிக்கத் துணியே இல்லே. எல்லாம் கந்தலாகப் போச்சு. உங்க ளுக்கும் வேலே குறையும்” என்று கிழவி யோசனை கூறிள்ை.

' அடுத்த சந்தைக்குத்தான் போக வேணும். நல்ல விலை கிடைத்தால் விற்றுவிட்டுச் சேலே வாங்கி வரு கிறேன். அப்புறம் சினே ஆட்டையும் கல்லா மேய்க் கலாம்” என்று கிழவன் தனது மனைவியின் யோசனையை ஆமோதித்தான்.

  • சந்தைக்குப் போக வேண்டியதில்லை. வடக்காலே வீட்டுச் சின்னப்பன் ஆட்டை விலைக்குக் கேட்டான். அவனே நாளேக்கு வரச்சொல்லி இருக்கிறேன்.”

இரவு கெடுநேரம் வரையில் கிழவன் இருமிக் கொண்டிருந்தான். அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அவன் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்திலே ஒரு பழம் பாயை விரித்துப் படுத்திருந்த கிழவிக்கும் தூக்கம் கெட்டுப் போய்விட்டது.

ரேண்டு மிளகு கொண்டு வரட்டுமா ? அதை வாயிலே போட்டு மெல்லுங்கோ-இருமல் நின்று போகும்” என்று கிழவி எழுந்தாள்.

சின்னப்பன் ஆட்டை என்ன விலைக்குக் கேட்டான் ? என்று திடீரென்று கிழவன் கேள்வி போட்டான்.

" இருபத்தஞ்சுக்குக் கேட்டான். கான் முப்பது சொன்னேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/150&oldid=616294" இலிருந்து மீள்விக்கப்பட்டது