பக்கம்:மாவிளக்கு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயல்

சின்மார் ஒரு வாரத்திற்கு முன்னே ஒருவனே ஒருவன் விட்டுப் பிரிந்த அவர்கள் இருவரும் இதைவிட நெருக்கடியான நிலைமையிலே சந்தித்திருக்க முடியாது.

எட்டுத் திக்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் கொந்தளித்துக் குமுறும் கடல். அவர்கள் இருவரையும் சேர்ந்து ஏப்பமிடுவதற்கு வெறிக்கொண்டு பேய்க் கூத்தாடும் அலேகள்.

ஹோ ஹோ வென்று புயற்காற்றுச் சீறுகிறது. கடல் தலை விரித்தாடுகிறது. அலைகள் கொக்கரிக் கின்றன.

காளி தன் கட்டுமரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிருக்கு மன்ருடுகிருன். அலைகள் அவனைக் கட்டுமரத்தோடு சேர்த்து அம்மானையாடுகின்றன. ஐந்து நாட்களாக அவன் பட்டினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/34&oldid=616055" இலிருந்து மீள்விக்கப்பட்டது