பக்கம்:மாவிளக்கு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயல் 35

ஆல்ை, இந்த வருஷம் எதிர்பாராதபடி ஏற்பட்ட புயலால் மீன் பிடிப்பவர்களுக்கு வேட்டை கிடைக்காத தோடு அவர்கள் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. கட்டு மரங்களெல்லாம் திக்குக்கொன்ருகச் சிதறிவிட்டன. திசை தெரியாமலும், புயலே எதிர்த்துக் கட்டுமரத்தைச் செலுத்த இயலாமலும் மீன் பிடிப்பவர்கள் தவித் தார்கள். ஒவ்வொரு கிமிஷமும் உயிர் போவதும் வருவது மாக இருந்தது.

இந்த நிலையில்தான் கங்கப்பன் எப்படியும் காளியைத் தேடிப் பிடிக்க வேண்டுமென்று தன் கட்டு மரத்தைச் செலுத்திக்கொண்டு வந்தான்.

புயல் சீறிற்று. அலேகள் குன்றுகளைப்போல மேலெழுந்தன. கங்கப்பனுடைய கட்டுமரம் அவற்றிலே ராட்டினம் போலே மேலெழுந்து மறுபடியும் கீழே பாய்ந்தது. கங்கப்பன் தலே தடாரென்று கட்டுமரத்திலே மோதியது. நல்ல வேளை அவன் அப்படி மோதிக் கொண்டதால் காளியின் அரிவாள் குறி தவறிப் போய் விட்டது. கடலுக்குள்ளே அது வேகமாகப் பாய்ந்து மறைந்தது.

காளி வீசிய அரிவாளேக் கங்கப்பன் கவனிக்கவே யில்லை. அவன் அலேகளோடு போராடிக்கொண் டிருந்தான். காளியின் அருகே செல்லுவதிலேயே அவன் காட்டமெல்லாம் கிலேத்திருந்தது. அடுத்த கணத்திலே அந்த எண்ணமும் கைகூடிவிட்டது.

அண்ணே, உன்னத்தான் சுத்திச் சுத்தித் தேடிக்கினு வந்தேன். எங்கே கையிலே துடுப்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/37&oldid=616061" இலிருந்து மீள்விக்கப்பட்டது