பக்கம்:மாவிளக்கு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மா விளக்கு

காணுேமே ; அலேயிலே அடிச்சுக்கினு போய்ட்டுதா ? என்று கூவினன் கங்கப்பன்.

துடுப்பிருந்தா இப்போ உன் தலையை உடைச் சிருக்க மாட்டேன ? என்று சீறின்ை காளி. என்ன சீறிலுைம் பட்டினிச் சீறல்தானே ? அலேயின் வெறிக் கூச்சல் அதை விழுங்கிவிட்டது. கங்கப்பன் காதில் அது விழவில்லை.

கங்கப்பன் காளியில் கட்டுமரத்தைக் கையிலே பிடித்துவிட்டான். கையை ஓங்கிக்கொண்டு கண் களிலே தீப்பறக்கத் தன்னை மறந்து எழுந்தான் காளி. ஆனால், ஒரு அலே அவனேக் கடலுக்குள்ளே தூக்கி யெறிந்தது. அவன் கோபத்தோடு கையை ஓங்கி யதைக் கங்கப்பன் கவனிக்கவில்லை. கட்டுமரம் ஆட்டங் கொடுப்பதால் அவன் கையை வீசியதாகவே கருதி யிருக்க வேண்டும். கங்கப்பன் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தனது கட்டுமரத்திற்குத் திரும்பி வந்துவிட்டான்.

உள்ளத்திலே எழுந்த கோப பூகம்ப அதிர்ச்சி யாலும், பட்டினிக் களைப்பாலும் காளி சோர்ந்து படுத் திருந்தான். பக்கத்தில்தானே இருக்கிருன் கங்கப்பன் ? சோர்வு நீங்கியதும் அவன்மேல் பாய முடியாதா என்ன ?

கங்கப்பன் தான் உண்ணுமல் பத்திரமாகக்கொண்டு வந்திருந்த ரொட்டித் துண்டை எடுத்து அவனுக்குக் கொடுத்தான். இதைக் காளி எதிர்பார்க்கவில்லை. இவன் எதற்கு எனக்கு ரொட்டி கொடுக்கவேணும் ? ஆனல் அதை ஆலோசிக்கப் பசி விடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/38&oldid=616063" இலிருந்து மீள்விக்கப்பட்டது