பக்கம்:மாவிளக்கு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்டன் பம்கின்ஸ் 45

புதிய புதிய ராக்கெட் விமானங்களை உண்டாக்கும் திறமையாவது இல்லாமலிருந்திருக்க வேண்டும். அந்தத் திறமையில்ைதான் அவன் பயித்தியக்காரனைன். மூளைத் திறமையால் பயித்தியப் பட்டம் பெற்ற எத்தனையோ பேர்களின் வரிசையிலே அவனும் சேர வேண்டியதாயிற்று.

இப்படியெல்லாம் நேருமென்று தெரிந்திருந்தால் கேப்டன் பம்கின்ஸ் தனது முயற்சியையே ஆழக் குழி தோண்டிப் புதைத்திருப்பான். மனிதனுடைய மூளைக்கு எத்தனையோ பெருமையிருந்தும் பின்னல் வரப்போவதைத் தெரிந்துகொள்ளும் வல்லமை இல்லா தது ஒரு பெரிய குறைதான். இல்லை இல்லே-குறை யென்ரு சொல்லிவிட்டேன் ? தப்பு தப்பு. எண்ணிப் பார்க்காமல் ஏதோ வாய்ச்கு வந்ததை உளறிவிட்ட குற்றத்திற்காக என்னையும் கேப்டன் பம்கின்ஸினுடைய வரிசையில் சேர்த்துவிடக்கூடாது என்று மன்ருடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். உண்மையில் நான் இந்த அதிகப் பிரசங்கம் செய்திருக்க வேண்டியதில்லை. கேப்டன் பம்கின்ஸின் விஷயத்தைக் கூற வந்தவன் அதை விட்டுவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசலாமா ? ம்ன்னித்துக் கொள்ளுங்கள். இனி அவனைப்பற்றி மட்டும் கூறிக்கொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

கேப்டன் பம்கின்ஸ் தனது மூளைத் திறமையால் அமரத்துவம் எய்த ஆசை கொண்டான். யாரும் இது வரை சாதிக்காத ஒரு அருஞ்செயலைச் சாதித்துக் காட்ட வேண்டுமென்று அவன் துடித்தான். அவனுடைய புத்தமைப்புத் திறனும் அதற்கு உதவியாக இருக்கிற தென்று அவன் உறுதியாக கம்பின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/47&oldid=616081" இலிருந்து மீள்விக்கப்பட்டது