பக்கம்:மாவிளக்கு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மா விளக்கு

இந்த நம்பிக்கையின் தாண்டுதலால் அவன் ரகசிய மாகப் புதிய ராக்கெட் விமானம்)ஒன்றைக் கட்டின்ை. செவ்வாய்க் கிரகத்திற்குப் போய்விட்டுத் திரும்பும் ஆற்றல் அந்த எந்திரத்துக்கு உண்டு. அவ்வளவு நீண்ட பிரயாணத்திலே என்னென்ன இடையூறுகள் ஏற்படக் கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றைக் களைவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய் திருக்கிறேன். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை ? என்று அவன் எனக்கு உறுதி கூறினன்.

கேப்டன் பம்கின்ஸ் என்னுடைய அந்தரங்க நண்ப ைைகயால் அவனுடைய உயிருக்கு எவ்வித ஆபத்தும் நேரக் கூடாதென்று கான் கவலேப்பட்டது இயல்பு தானே ? நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே. கான் செய்திருக்கும் ராக்கெட் அற்புதமானது ; அதிநுட்ப மானது. எதிர்பாராமல் தோன்றும் நெருக்கடியான கிலேமையைக்கூடச் சமாளிக்க மனிதனுக்கு மனம் என்று ஒன்று இருப்பதுபோல் அதற்கும் ஒரு மனம் உண்டாக்கியிருக்கிறேன் என்று அவன் எனக்குத் தைரியமூட்டினன். அவன் பேசுகின்ற தோரணையி லிருந்து எனக்கும் ஆறுதல் பிறந்தது.

அதனால் அவன் ஒரு நாள் இரவிலே மற்றவர் களுக்குத் தெரியாமல் தனது ராக்கெட்டில் புறப்பட்ட போது நான் தடை செய்யவில்லை. வானெலிக் கருவியின் மூலமாக எனக்கு அவ்வப்போது தகவல் அனுப்புவதாக வாக்களித்தான் ; அதற்கு ரகசியமான ஒரு புதிய ஒலி அலே நீளத்தையும் உண்டாக்கி எனக்குத் தெரிவித்திருக் தான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/48&oldid=616083" இலிருந்து மீள்விக்கப்பட்டது