பக்கம்:மாவிளக்கு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது சிறுகதை யுகம். எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதில் வெளியாகின்ற இ லக் கி ய ப் பத்திரிகைகளில் சிறுகதை முக்கியமான இடம் பெற்றிருப் பதைக் காணலாம்.

இவ்வாறு பெருமை பெற்றிருக்கும் சிறுகதை பல வேறு வகைகளில் வேகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. சுமார் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் சிறுகதைக்கு ஒரு வித மான இலக்கணம் கூறுவார்கள். இன்று அந்த இலக்கணம் மாறுபட்டிருக்கிறது.

சிறிய கதையாக இருப்பதுதான் சிறுகதை என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. சிறு கதை என்ற பெயரே அதற்குச் சான்று. இன்று அந்தக் கருத்து அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சிறு கதை ஒரே ஆணர்ச்சியை அல்லது உள்ளக் கிளர்ச்சியை அல்லது நிகழ்ச்சி யைச் சுற்றிப்பின்னிக் கிடக்க வேண்டும் என்பது இன்றைய முக்கியமான கருத்து.

சிறு கதை அளவில் சிறியதாக இருக்க வேண்டும் என்ப தில்லை. அது விவரிக்கும் உணர்ச்சியே பிரதானம். கதை மிக நீண்டிருக்கலாம். ஆனால், உணர்ச்சி ஒன்ருக இருந்தால் அது சிறுகதைதான் என்று கூறுகிரு.ர்கள். புகழ் பெற்ற நார்வே நாட்டு ஆசிரியர் நட் ஹாம்சன் முன்னுாறு பக்கங் களுக்கு மேல் உள்ள பல கதைகள் எழுதியுள்ளார். ஒரே உணர்ச்சியை மட்டும் கூறும் கதைகள் அவற்றிலே உண்டு. அவை சிறு கதை இலக்கணம் கொண்டவையாகவே கருதப் படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/5&oldid=615995" இலிருந்து மீள்விக்கப்பட்டது