பக்கம்:மாவிளக்கு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4& மா விளக்கு

என் வானெலிப் பெட்டியைப் பலவாறு திருப்பி வைத்து பார்த்தேன். ஒரு பயனும் ஏற்படவில்லே. உலகத்துச் சேதியெல்லாம் அதிலே கேட்டது : எத்தனையோ பாஷைகளில் எத்தனையோ வகையான சங்கீதங்கள், காதைத் துளேக்கும் நாராசங்கள் எல்லாம் கேட்டன. ஆனால், பம்கின்ஸிடமிருந்து மட்டும் என்ன செய்தும் சேதி கிடைக்கவில்லே. அதனல், அந்தப் பாலைவனத்தை விட்டு வீடு போய்ச் சேர்ந்தேன். ஆனல், பம்கின்ஸ் கிலே பற்றி அறிந்துகொள்ளும் முயற்சியை மட்டும் விட வில்லை. அவனப்பற்றி எங்கிருந்தாவது ஏதாவது தகவல் கிடைக்காதா என்று ஆவலோடு பத்திரிகை களையும், வானெலி ஒலிபரப்புக்களையும் துருவிக்கொண் டிருந்தேன். அவன் தன் முயற்சியில் தோல்வியுற்றிருக் தாலும் உலகத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் யாதொரு ஆபத்துமின்றி இறங்கியாவது இருப்பான் என்று நான் நம்பினேன். -

நான்காம் நாளன்று கலிபோர்னியர் வானெலி நிலையம் அவனேப்பற்றிச் சுருக்கமாக ஒரு தகவலேப் பளிச்சிட்டது. பாரஷல்ட் வானக்குடையின் உதவி யால் ஒரு மனிதன் இங்கே இறங்கியிருக்கிருன். தரையை அடையும்போது அவனுக்குச் சரியான பிரக்ஞையில்லே. அக்கம் பக்கத்திலிருந்த மக்களின் உதவியால் அவன் உயிர் பிழைத்ததாகச் சொல்ல வேண்டும். பெயர் பம்கின்ஸாம். செவ்வாய் கிரகத்திற்குப் போய் வந்த தாக அவன் கூறுகிருன் மற்ற விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவன் பறந்து சென்றதாகக் கூறும் ராக்கெட்டையும் காணுேம் என்று சொன்ன அந்தத் தகவலேக் கேட்டதும் கான் துள்ளிக் குதித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/50&oldid=616087" இலிருந்து மீள்விக்கப்பட்டது