பக்கம்:மாவிளக்கு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்டன் பம்கின்ஸ் 49

உடனே ஒரு ஆகாய விமானத்தைத் தனியாக அமர்த்திக் கொண்டு கலிபோர்னியா போய்ச் சேர்ந்தேன்.

நான் கேப்டன் பம்கின்ஸை சந்திப்பதற்கு முன்ன லேயே நூற்றுக்கணக்கான பேர் அவனேக் கண்டு விஷ யத்தை அறிந்துகொண்டார்கள். அவன் மூளே பழுது ற் - றிருக்கிறது என்பதையும் ஐயமற முடிவு செய்துவிட் டார்கள். பத்திரிகை நிருபர்கள், வானெலி நிருபர்கள், சமூக சேவையில் தோய்ந்தவர்கள், விஞ்ஞானிகள், உயிரியல் தத்துவத்தில் அழுந்தியவர்கள், திடுக்கிடும் செய்தித் தரகர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோரும் கேப்டன் பம்கின்ஸைக் குறுக்கு விசாரணை செய்து முடித்துவிட்டார்கள். - தன்மையில் அவனைச் சக்திக்கவே முடியாதோ என்று ஆகிவிட்டது எனக்கு. கடைசியில் எப்படியோ அதைச் சமாளித்தேன். கேப்டன் பம்கின்ஸும் என்னிடம் தனியாகப் பேச விரும்பினன். நான் ஒருவ ளுவது அவன் கூறுவதை உண்மையென்று நம்புவே னென்று கினைத்திருக்கலாம்.

ஆனால், அதுவரையில் ஏற்பட்டிருந்த ஏமாற்றத் தால் பாதிக்கப்பட்ட அவன் முதலில் என்னிடத்திலும் எச்சரிக்கையோடுதான் பேச்சைத் தொடங்கினன். உண்மையைச் சொல்லி எனக்குக் கிடைத்த பட்டம் போதும். இனிமேல் யாரிடமும் அதைப்பற்றி கான் பேசப் போவதில்லே ' என்று அவன் சோர்வோடு பேசினன். -

பம்கின்ஸ், என்னே உனக்குத் தெரியாதா ? நான் உன்னுடைய உயிர் நண்பனல்லவா ? என்னிடம் ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/51&oldid=616089" இலிருந்து மீள்விக்கப்பட்டது