பக்கம்:மாவிளக்கு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மா விளக்கு

நீ இப்படிப் பேசலாமா ? என்று நான் வருத்தத்தோடு கூறினேன்.

கான் உண்மைதான் பேசுகிறேனென்று நீ மாத் திரம் எப்படி நம்பப் போகிருய் ?

யார் என்ன சந்தேகித்தாலும் உன்னைப்பற்றி கான் சந்தேகப்படமாட்டேன். நம்முடைய சிநேகத்தின் மேல் ஆணே நீ கண்டதை ஒளிக்காமல் சொல் என்று ஆத்திரம் கலந்த குரலில் நான் உரத்துக் கூவினேன். --

கேப்டன் பம்கின்ஸுக்குக் கொஞ்சம் உ ற்சாகம் திறந்தது. விஷயத்தைச் சொல்லலான்ை.

கான் செவ்வாய்க்கு எவ்விதமான இடையூறு மில்லாமல் போய்ச் சேர்ந்தேன். எனது ராக்கெட் நான் எதிர்பார்த்தபடியே முற்றிலும் ஒழுங்காக வேலே செய்தது.' -

எனக்குச் சேதி அனுப்புவது திடீரென்று கின்று விட்டதே ? என்று நான் குறுக்கிட்டேன். -

ஆமாம், அந்த ஒரு விஷயத்தில்தான் எனது எந்திரம் கோளாறடைந்துவிட்டது. அதுவும் என் லுடைய அஜாக்கிரதையால் ஏற்பட்டதுதான். செவ் வாய் மண்டலத்தை அடையப்போகிற குதுகலத்தில் மனிதனுடைய மூளையின் சாதனைகளைப்பற்றி நான் ஒரேயடியாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்து விட்டேன். அந்த நேரத்தில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது. அது எனது அகம்பாவத்தின் மண்டையிலே கல்ல அடிதான். ஆல்ை, அதைவிடப் பெரிய அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/52&oldid=616091" இலிருந்து மீள்விக்கப்பட்டது