பக்கம்:மாவிளக்கு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்டன் பம்கின்ஸ் 5i

செவ்வாயிலே காத்திருந்தது. நான் அங்கே எனது ராக்கெட்டை விட்டு இறங்கும்போது நம்மைப்போன்ற ஒருவகை மனிதக் கூட்டத்தைக் காண முடியுமென்று நான் எதிர்பார்க்கவில்லே. ஆனால், அழகே வடிவமான மக்களே அங்கே கண்டேன். அவர்களுடைய மேனி அழகைக் கண்டு அதல்ை கான் அவர்களே உயர்வாக மதிக்கவில்லை. வடிவத்திலே அழகும் கவிதைத் தன்மையுமிருந்தாலும் அவர்களெல்லாம் அறிவிலே மனிதனுக்குப் பக்கத்தில் வர முடியாது என்றுதான் நிச்சயித்துக் கொண்டேன். நான் செவ்வாய்க்குப் போனதைப்போல அவர்களால் நமது பூமிக்கு வர முடியுமா ? ஏதோ பரிணுமவரிசையிலே மனிதனுக்குக் கீழே வெகு தூரத்தில் இருக்கும் பிறவிகள் என்றுதான் அவர்களைக் கருதினேன்.” -

பின்னே வேறு எப்படித்தான் இருக்க முடியும் ? மனிதனுக்கு இணையாகச் சிருஷ்டியிலே யாராவது இருக்க முடியுமா? உன்னுடைய சாதனையே அதற்கு உதா ரணம்’ என்று நான் பேசத் தொடங்கினேன். எனது உற்சாகத்தையும், மனித சமூகத்தின்மேல் எனக்கிருந்த அசைக்க முடியாத பெருமையையும் அதற்குமேல் என்னல் அடக்கிவைக்க முடியவில்லே. -

இப்படி கான் கூறியதும் அவன் முகம் களையிழக்க லாயிற்று.

கண்பா, நான் மனம்விட்டுப் பேசலாமா ? என்று அவன் தயக்கத்தோடு கேட்டான்.

தாராளமாகப் பேசு. என்னிடம் உனக்கேன் இத்தனே தயக்கம் : உலகமே உன்னை எதிர்த்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/53&oldid=616093" இலிருந்து மீள்விக்கப்பட்டது