பக்கம்:மாவிளக்கு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவிளக்கு

" வள்ளியாத்தா, வந்துவிட்டாயா மாவிளக்கு எங்கே ’ என்று ஆவலோடு கேட்டாள் கிழவி முத்தம்மாள். -

". இதோ கொண்டு வந்திருக்கிறேன். ஏனம்மா இருட்டிலேயே உட்கார்ந்திருக்கிருய் யாருமே இந்தப் பக்கம் வரவில்லையா ?” -

  • யாரும் வரவில்லை. வந்திருந்தால் விளக்கேத்தி வைக்கச் சொல்லியிருப்பேன். எல்லோரும் உன்னைப் போலக் கோயிலுக்குப் போயிருப்பார்கள். மாவிளக்கு அணையாமல் வந்திருக்குதா ? அதை எனக்குச் சொல்லு. வீட்டு விளக்கைப் பிறகு கவனிக்கலாம்.”

" அம்மா, மாரியாத்தாள் கோயிலிலே கூட்டம் சொல்ல முடியாது ' என்று வள்ளியாத்தாள் கோயில் காட்சியை விவரிக்கத் தொடங்கிள்ை. கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/60&oldid=616108" இலிருந்து மீள்விக்கப்பட்டது