பக்கம்:மாவிளக்கு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவிளக்கு 59

அவள் கூறி முடிப்பதற்குள் அவளுடைய மகள் லக்ஷ்மி பேசப்புகுந்து விட்டாள். அவளுக்கு ஆறு வயதிருக்கும்.

'பாட்டி, எங்கே பார்த்தாலும் மாவிளக்காகவே இருந்தது. அப்பா ! எத்தனே மாவிளக்கு ' என்று அந்தக் குழந்தை தனது ஆச்சரியத்தைச் சொல்லிலும் குரலிலும் வெளிப்படுத்தியது.

வள்ளியாத்தா, நீ. கொண்டுபோன மாவிளக்கு அணையாமல் வீட்டுக்குள்ளே வந்து சேர்ந்ததா ?” என்று அந்தக் கேள்வியையே கிழவி மறுபடியும் கேட்டாள்.

' ஆமாமம்மா, அணேயாமல்தான் இருக்குது.” இல்லே பாட்டி, அம்மா...... ’ என்று குழந்தை குறுக்கிட்டுப் பேச வாயெடுத்தது.

வள்ளியாத்தாள் சட்டென்று குழந்தையை வாய டக்க முயன்ருள். கையிலே ஜாடை காட்டினுள். கண்களை உருட்டி மிரட்டி விழித்தாள். வாய் மேலே கையை வைத்துப் பேசாதிருக்கும்படி எச்சரிக்கை செய்தாள்.

குழந்தை சடக்கென்று பேச்சை நிறுத்திக் கொண்டது. அம்மாள் இப்படி முகத்தை வைத்துக் கொண்டதை அந்தக் குழந்தை இதுவரை பார்த்த * தில்லை.

“ அம்மா, ஒரு ஆயிரம் இரண்டாயிரம் மாவிளக்கு வந்திருக்கும். பக்கத்துரரெல்லாம். அப்படியே திரண்டு வந்துவிட்டது ’ என்று வள்ளியாத்தாள் பேச்சை ஒட்டிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/61&oldid=616110" இலிருந்து மீள்விக்கப்பட்டது