பக்கம்:மாவிளக்கு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவிளக்கு 6 :

' அதென்ன வாக்கு ? நீ சொல்றதை என்னிக்காவது கான் தட்டி கடந்ததுண்டா ?”

" அப்படி கடக்கமாட்டாய், அது எனக்கு கல்லாத் தெரியும். இனிமேல் வருசம் தவருமல் நீ மாரியாத்தா கோன்புக்கு நம் ஊருக்கு வந்து மாவிளக்கு எடுக்க வேணும். வருவாயா ?”

" நான் கட்டாயமாக வருவேன். யுேம் கானுமாக மா விளக்கு எடுக்கலாம். சரிதானே ?”

' என்ன விட்டுப் பேசு. நீ எனக்காக இதைச் செய்வாயா ?”

ல கூடிமிக்கு சும்மா இருக்கமுடியவில்லே. அம்மாளும் பாட்டியும் பேசிக் கொள்வது மு ற் றி லு ம் அவளுக்கு விளங்காவிட்டாலும் பாட்டி கேட்கிற கேள்விக்கு நிச்சயமான பதில் கொடுக்க வேண்டுமென்று அவளுடைய இள உள்ளத்திலே பட்டது.

" பாட்டி, நான் வந்து மா விளக்கு எடுக்கிறேன், பாட்டி. அம்மா வராமல் போனலும் கான் வருவேன்.” கிழவிக்குப் பூரிப்புத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் முன்னலே மனத்திலே உதயமான எண்ணங் களையெல்லாம் அவள் மறந்துவிட்டாள்.

“ இப்படி வாம்மா, கண்ணு ' என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டினள். குழந்தை அவளருகே சென்றது. அவள் லக்ஷ்மியை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் இரண்டு கைகளாலும் தடவிப் பார்த்துப் புளகாங்கிதமடைந்தாள்.

' கண்ணு, நீயுந்தான் அம்மாவோடு சேர்ந்து மாவிளக்கு எடுக்க வேணும். நீ எடுக்கிறதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/63&oldid=616114" இலிருந்து மீள்விக்கப்பட்டது