பக்கம்:மாவிளக்கு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மா விளக்கு 6?

" ஒண்னுமில்லே, அடுத்த வருசத்துக்கு மாவிளக் கெடுக்க தோன் வரவேணும். அவ்வளவுதான்.'

அம்மா, மாவிளக்கு அணையவே இல்லேயம்மா ? என்று தடுமாற்றத்தோடு கூறினுள் வள்ளியாத்தாள்.

முத்தம்மாள் ஒன்றும் பேசவில்லை. ' எனக்காக இந்தப் பெண் இப்படிப் பொய் சொல்லுதே ” என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டாள். ' படலம்

கண்ணை மறைத்தாலும் வீட்டுக்குள்ளே விளக்கு வந்தால் எனக்குத் தெரிஞ்சுபோகும் என்று இவளுக்குத் தெரியவா போகுது : கண்ணே மூடிக் கொண்டிருந் தாலும் இருட்டு வீட்டுக்குள்ளே விளக்கு வந்தால் கண்ணுக்குள்ளே ஒளி வந்தாப் போல இருக்கிறதை இவள் பார்த்ததில்லை. அதுவும் நல்லதுதான். அவளுக்கு என்னத்துக்கு மனசுக்குக் கவலே பின்னலே வரப் போவதை கினேச்சு இவள் வீணுகக் கவலேப்பட்டுக்கப் படாது ' என்று இப்படி எண்ணமிட்டுக் கொண்டே, * அது சரி வள்ளியாத்தா, கம்ம மாவிளக்கு எப்படி அணையும் லக்ஷமி இருக்கிற வீட்டிலே இருட்டே வராது” என்று சிரித்த முகத்தோடு சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/69&oldid=616126" இலிருந்து மீள்விக்கப்பட்டது