பக்கம்:மாவிளக்கு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் விஷயம்

எனக்கு அவளிடம் காதல் ; அவளுக்கு என் நண்பன் முத்துசாமியிடம் காதல். அவனுக்கோ யாரிடத்தும் காதல் இல்லே , என்னிடம் மட்டும் அவனுக்குப் பெரிய தோர் கட்பு உண்டு.

இந்தப் பின்னணியில்தான் நிகழ்ச்சிகள் உருவாயின. முத்துசாமி என்னைப் பலவாறு கேலி செய்வான். ' என்னடா காதல், காதல் என்று பிரமாதப் படுத்து கிருய் ! காதலாவது கத்திரிக்காயாவது ? அதெல்லாம் கவிஞர்கள் கட்டிவைத்த கற்பனே ’ என்று ஏளனமாகப் பேசுவான். இம்மாதிரி அவன் பேசுவதைக் கேட்கும் போதெல்லாம் எனக்குச் சிரிப்புத்தான் வரும். இனிப்புச் சுவையைத் தங்கள் சொந்த அனுபவத் திலேயே அறியாதவர்களிடம் அதைப்பற்றி எவ்வளவு விளக்கிக் கூறினலும் அவர்களுக்கு அது விளங்காது. கொஞ்சம் சர்க்கரையை அள்ளி அவர்கள் வாயிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/70&oldid=616128" இலிருந்து மீள்விக்கப்பட்டது