பக்கம்:மாவிளக்கு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் விஷயம் 75

முடிவதில்லை’ என்று நான் கெஞ்சும் மொழியில் கேட்டேன்.

முத்துசாமி உடனே அதற்கிசைந்தான். இசைந்த தோடு அப்பொழுதே எழுதவும் தொடங்கிவிட்டான். அவனுடைய கற்பனையின் திறமையோ, அல்லது எனது அவல கிலேமை அவனுக்கு ஊட்டிய உணர்ச்சியோ அல்லது இரண்டும் சேர்ந்தோ-எப்படியோ ஒரு மிக உருக்கமான கடிதம் உருவெடுத்தது. காதல் என்னும் பெரு நெருப்பிலே தானே விழுந்து தத்தளித்துக்கொண் டிருந்ததால் எவ்வாறு அவனுக்கு உணர்ச்சி பொங் குமோ அப்படி அவன் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போது என்னல் கண்ணிரை அடக்கமுடிய வில்லை ; இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. அக் கடிதத்தின் மூலம் எனக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கு மெனத் தெரிந்தது. உள்ளத்திலே ஒரு புதிய உற்சாகம் கொழுந்துவிட்டு மேலெழுந்தது. கடிதத்திற்குப் பிரதி யொன்றெடுத்துக் கையெழுத்திட்டேன். அதை உறைக் குள் போடும்போது என் கை நடுங்கியது.

கடிதத்தைத் தபாலிலே சேர்த்துவிட்டு இன்று வரை ஆவலோடு பொறுத்திருந்தேன். பதில் கடிதம் வரும் என்றும் அவளே கேரில் பேசுவாளென்றும் எதிர்பார்த்தேன். இன்று கல்லூரியில் சக்தித்தபோது அவள் ஒன்றும் பேசவில்ல்ை. அதனல் மாலே நேரம் ஆக ஆக என்னல் பொறுத்திருக்க முடியவில்லை. கல்லூரி முடிந்ததும் சுந்தரியிடம் கானே சென்று, " எனது கடிதத்தைப் பார்த்தாயா ' என்று ஆவ லோடு விசாரித்தேன். முதலில் அவள் பதில் பேச வில்லை. ஆனால், மறுமுறையும் கான் வற்புறுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/77&oldid=616142" இலிருந்து மீள்விக்கப்பட்டது