பக்கம்:மாவிளக்கு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மாவிளக்கு

கர்ஜித்தது.” எச்சுமிக்கு இந்த வார்த்தைகள் கன்ருகக் கேட்டன. அவளேதான் அவற்றைச் சொன்னுள். ஆளுல், முத்தி கூறுவதாகத்தான் அவள் உள்ளத்திலே வார்த்தைகள் பதிந்தன.

“ அம்மா, இதோ ஆச்சு. கோவிக்காதேங்கோ ” என்று எச்சுமி பயந்து பயந்து கூறிக்கொண்டே அவசர அவசரமாகக் குடிசையைப் பெருக்கினுள். தன் தாயார் கூறும் பதிலே அவள் கன்முகக் கற்றுக்கொண்டிருந்தாள். அகத்திக் கீரையைப் பறித்த பிறகு அதன் இலேக் காம்புகளைச் சேர்த்து ஒரு விளக்குமாருகக் கட்டி எச்சுமியின்தாய் கொடுத்திருந்தாள். அதைத்தான் எச்சுமி இப்பொழுது உபயோகித்து வீடு பெருக்குகிருள்.

தனியே குடிசையில் இருக்க மாட்டேன் என்று இப்பொழுது எச்சுமி முன் போலத் தொந்தரவு செய்வ தில்லை. அவளுக்குத்தான் எஜமானியம்மாள் கிடைத்து விட்டாளே எஜமானியம்மாளின் பணிவிடையிலே அவள் பொழுதெல்லாம் இன்பமாக வேறு நினைப்பின்றி

கழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/82&oldid=616152" இலிருந்து மீள்விக்கப்பட்டது