பக்கம்:மாவிளக்கு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&3 மா விளக்கு

என்று ஐம்பது வரை சொல்லிக் கொண்டிருக்கும். இரண்டாம் வகுப்புக்கு அப்பொழுது தோட்ட வேலே.

இப்படியாக ராமசாமி வாத்தியார் பாடங்களே மாற்றி மாற்றி அமைத்து மூன்று வகுப்புக்களேயும் சமா ளித்து வந்தார்.

இந்த வித்தையிலே ஈடுபட்டிருக்கும் பெரும் பான்மையான ஆசிரியர்களைப் போலவே ராமசாமி வாத்தியாரும் ஆசிரியத் தொழிலேயே முழுமனதோடு வெறுத்துக்கொண்டிருந்தார். அதன் விளைவாக அவர் மனத்தில் அந்தச் சமயத்தில் புதுவிதமான யோசனை ஒடிக்கொண்டிருந்தது.

நாளேக்குப் போய் அந்த ஆட்டத்தில் இந்த மாத சம்பளம் முழுவதையும் வைத்துப் பார்த்து விடலாம். வந்தால் ஒரு ஐநூறு வரட்டும் ; இந்த வேலேயை உதறி எறிந்துவிட்டு ஒரு வெற்றிலே பாக்குக் கடை வைத்துக் கொள்ளலாம். சில்லறைக் கடை வைக்கக்கூட வகை யில்லாமலல்லவா இந்த வேலையைக் கட்டிக் கொண்டு மாரடிக்கவேண்டியிருக்கிறது? முப்பது ரூபாய் சம்பளம்; பஞ்சப்படி இருபது ரூபாய். சாமான்கள் விலே நான்கு மடங்கு உயர்ந்து விட்டது ; சம்பளம் ஒன்றரை மடங்கு தானகியிருக்கிறது. எப்படித்தான் காலக் தள்ளுகிறது ? இந்த லக்ஷணத்தில் ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கு மனசு போனபடியெல்லாம் ஜில்லாவில் ஒரு கோடியி லிருந்து இன்னெரு கோடிக்கு எந்த சமயத்தில் வேண்டு மாலுைம் மாற்றிவிடுகிருர், அதற்குத் தப்ப வேண்டு மால்ை அவருக்குத் தொங்கு சலாம் போட்டுக்கொண் டிருக்க வேண்டும். சே, இந்த வாத்தியார் வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/84&oldid=616156" இலிருந்து மீள்விக்கப்பட்டது