பக்கம்:மாவிளக்கு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மணி 87

மாதிரி ஆடிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லே யென்று தெரிந்தது. நாள் முழுதும் ஆடினலும் காலு ரூபாய் வரும்; அல்லது நாலு ரூபாய் போகும். அதனல் தமது எண்ணம் கை கூடாது என்பதை அவர் உணர்ந் தார். ஆதலால் ஐம்பது ரூபாயையும் எடுத்து ஒரே யடியாக வைக்கத் தீர்மானித்தார். இதற்குள் ஆட்டத் திலும் பழக்கமேற்பட்டு விட்டதால் அவருக்குத் துணிச்சல் பிறந்துவிட்டது. பணத்தை யானையின் மேல் வைத்துவிட்டுக் கன்னத்தில் கைகொடுத்து உட்கார்ந்து விட்டார் ராமசாமி.

' வை ராஜா வை ; வைக்க வைக்க ஐயம். காய், குதிரை காலி-வை ராஜா வை '’ என்று கூவிக் கூவி ஆட்டம் கடத்துபவன் எல்லோரையும் கவர்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆறு படங்களிலும் பணம் கட்டப் பட்டிருந்தால்தானே அவனுக்கு லாபம் நிச்சயம் ? தவிர ஒரு படத்தில் ஐம்பது ரூபாய் விழுந்து விடவே அவனுக்கு மற்ற படங்களிலும் பணம் கிறைய விழவேண்டு மென்ற எண்ணம் அதிகரித்தது.

அதல்ை பெட்டியில் உள்ள உறையை எடுப்ப தற்குக் கொஞ்சம் தாமதம் ஏற்படவே ராமசாமி வாத்தி யார் யோசனையில் ஆழ்ந்துவிட்டார். " இன்று மட்டும் ஒரு ஐநூறு வந்து விட்டால் என் கவலேயே தீர்ந்து போகும். சூதாடுவது நல்லதல்ல தான். நானே எத்த னேயோ தடவை மாணவர்களுக்கு உபதேசம் செய்திருக் கிறேன். ஆனல், வேறு வகையில் கான் எப்படிப் பணம் சம்பாதிக்கப் போகிறேன் ? இந்த வாத்தியார் வேலேயிலிருந்து கொண்டு மிச்சப்படுத்துவதென்பதோ முடியாத காரியம். ஊரார் தயவில் இலவசமாகக் காய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/89&oldid=616167" இலிருந்து மீள்விக்கப்பட்டது