பக்கம்:மாவிளக்கு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 8 மா விளக்கு

கறி, மோர் முதலியவை கிடைக்காவிட்டால் சோற் றுக்கே தாளம் போட வேண்டியதுதான். இன்றைக்கு ஒருநாள் மட்டும் சூதாடிவிட்டு மறுபடியும் இந்தப் பக்கமே வரப்படாது. ஒரு ஐநூறு வந்து விட்டால் ராஜினமாக் கடிதத்தை அந்த ஜில்லா போர்டு காரிய தரிசி மூஞ்சியில் எறிந்துவிட்டுப் பேசாமல் ஒரு சின்னக் கடை வைத்துக்கொள்ளலாம். எருமை மாடு இரண்டு வாங்கி வளர்த்தால்கூடப் பால் விற்றுத் தினம் மூன்று நான்கு ரூபாய் சுலபமாகச் சம்பாதித்துவிடலாம். யாருடைய தயவு தாட்சண்ணியமும் வேண்டியதில்லை.”

இப்படியெல்லாம் அவர் ஒரே விஷயத்தைப் பற்றித் திருப்பித் திருப்பி எண்ணிக் கொண்டிருந்தார். மணியும் மூன்ருகிவிட்டது. ஆட்டமும் தொடர்ந்தது. அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. யானையிலே இரட்டைப் படம் வந்தது. ராமசாமிக்கு அவர் கட்டிய ஐம்பதோடு மேலும் நூறு ரூபாய் கிடைத்தது. ஆனால், யானையின் மேல் கிடக்கும் நூற்றைம்பது ரூபாயையும் அவர் தொடவே இல்லே. அடுத்த ஆட்டத்திற்கும் அது அப்படியே குவியலாக இருந்தது. முதலில் ஐம்பது ரூபாய் வைத்த ஆள் நூற்றைம்பது வைக்கத் தயங்கு வான ? அதல்ை யாரும் ஆச்சரியப்படவில்லை.

அடுத்த ஆட்டத்திலும் அவருக்கு யோகந்தான். ஒற்றை யானே விழுந்தது. பணம் வந்து குவிந்து கொண்டிருந்தது. இந்தத் தடவை எல்லாவற்றை யும் வாரிக் கொள்வார் என்று மற்ற சூதாடிகள் எதிர் பார்த்தார்கள். ஆல்ை, அவர் பணத்தைத் தொடவே இல்லை. அவருடைய கெஞ்சத் துணிவைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/90&oldid=616169" இலிருந்து மீள்விக்கப்பட்டது