பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

நூல்கள், அவைகளில் கண்டுள்ள செய்திகள் அனைத்தும் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டனவாகவே உள்ளன. ஆதலால், அவைகளை விடுத்து விடுதலைக்குப் போராடிய இந்த வீரர்கள் பற்றிய உண்மையான தியாகவடிவை. பல்வேறு ஆவணங்களின் துணைக் கொண்டு இந்த நூலில் சித்திரிக்க முயன்றுள்ளேன். சிவகங்கை சீமை சேர்வைக்காரர்கள் பற்றிய முழுமையான நூலாக இந்த நுால் அமையாவிட்டாலும், அவர்களது பொன்றாப் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய விவரமான தகவல்களைத் தருகின்ற முதல்நூலாகக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் இந்த நூலில் பொதிந்துள்ள உண்மை விவரங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு ஆவணங்களில் இருந்து படித்து குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்கு மேலான அனுமதி வழங்கிய சென்னை, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிலைய ஆணையர் அவர்கட்கும், ஆவணங்களை கோரிய அப்பொழுதைக் கப்பொழுது வழங்கி உதவிய சென்னை தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகப் பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை இங்கு புலப்படுத்தி அமைகிறேன்.


இராமநாதபுரம் எஸ். எம். கமால்

நாள் : 21. 10. 89