பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

இந்த அறிவிப்பை இந்தச் சுவற்றில் இருந்து அகற்றியவர்கள், பஞ்சமாபாதகங்களுக்கும் கூடுதலான பாவத்தைப் புரிந்தவர்களாகப் போகட்டும்!

இதனைப்படிப்பவர்கள் இந்த வேண்டுகோள் நகலை வரைந்து வைத்துக் கொள்ளுங்கள்!

இவண். பேரரசர்களுக்குப் பணியாளரும் இழிபிறப்பான பரங்கிகளுக்குப் பரம எதிரியுமான மருதுபாண்டியன்

சிவகங்கைச் சேர்வைக்காரரது இந்தச் சிறப்பான வேண்டுகோள், திருச்சிராப்பள்ளி கோட்டையில் ஜான் மாதத் துவக்கத்தில் நவாப்பின் மாளிகையை அடுத்துள்ள பெரிய நுழைவாயிலிலும் ஶ்ரீரங்கத்தில் பாளையக்காரரது மாளிகைச் சுவற்றிலும் ஒட்டப் பட்டு இருந்தன. திருச்சியில், ஒட்டப்பட்டிருந்த [1]வேண்டு கோள்களில் காணப்பட்ட வாசகங்களைவிட, கூடுதலாகக் கீழ்க்கண்ட வாசகமும் ஶ்ரீரங்கத்தில் காணப்பட்டது.

"ஶ்ரீரங்கத்தில் உள்ள பெரியோர்களையும், ஆச்சாரியர்களையும் இந்த மருதுபாண்டியனாகிய நான் அவர்களது காலில் விழுந்து வணங்குகிறேன். தென்னகத்தில் உள்ள தன்னரசு மன்னர்கள் - கோட்டைக் கொத்தளங்களையும் அமைத்து கொடி கட்டி வாழ்ந்தவர்களும், அவர்களது குடிமக்களும், இழிபிறப்பாளர்களான பரங்கிகளால், எளிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதனை எதிர்த்துப் போராடும் எனக்கு உங்களது மேலான ஆசீர்வாதங்களை வழங்கி அருளுங்கள்”.

தமிழக அரசியல் வரலாற்றில், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, போராளிகள் அணியில் இருந்து வெளியிடப்பட்ட, முதல் பொது வேண்டுகோளாகும். இது, வரலாற்றுச் சிறப்புமிக்கதும் அன்றைய காலகட்டத்து சமுதாய அமைப்பு.


  1. 42 Revenue Sundries, vol. 26 (16-6-1801) p. 1457