பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

கும்பெனியாருக்கு கடைசிக்கடிதம்

சிவகங்கைச் சேர்வைக்காரர்களது சீற்றமான மன உறுதியைப் போல கும்பெனியாரும், அவர்களை அழிப்பதில் முனைந்து நின்றனர். கூடுதலாக எவ்வளவு வீரர்களைத் தங்கள் அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்கான ஆயத்தத் திட்டங்களை இராமநாதபுரம் கலெக்டர் தயாரித்து வந்தார். அத்துடன் சிவகங்கைச் சேர்வைக்காரர்களது இறுதிப் போர்க்களமாக விளங்கப்போகும் காளையார் கோவில் கோட்டையை அரண்மனை சிறுவயலில் இருந்து அணுகுவதற்கு ஏற்றவகையில் அரண்மனை சிறுவயலில் இருந்து காளையார்கோவில் கோட்டைத் திக்கில் ஒன்பது மைல் தொலைவில் காட்டை வெட்டி, அழித்து பாதை உண்டாக்குவ தற்கு எவ்வளவு பேர்கள் தேவைப்படும். எவ்வளவு பணம் செல வாகும் என்பதற்கான மதிப்பீடுகளையும் தயாரித்து சென்னைக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.[1]

சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களும் சிவகங்கைச் சீமையின் வடமேற்கு எல்லையில் நத்தம் பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்தார்கள். காரணம், அங்கு கும்பெனியாரது பணியில் இருந்த தாசில்தார் ஒருவர் மறைந்து வாழ்ந்து, பரங்கியருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட தேவதானப்பட்டி கோபால நாயக்கரையும் அவரது ஆட்களையும் தீவிரமாக வேட்டையாடிப் பிடித்தார். அதனால் அங்குள்ள மக்கள் கொதிப்படைந்தனர். சிவ கங்கைக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களது துணை கொண்டு அந்தக் கும்பெனியாது கைக்கூலி தாசில்தாரைக் கொலை புரியச் செய்தது தன் அங்கு இருந்து பயந்து ஒடிய பாளையக்காரரை வர வழைத்து அவரையும் கிளர்ச்சியில் இணைத்து நத்தம் பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.[2]


  1. 1. Madurai District Records, vol. 1133, (14-12-1801)p. 288.
  2. 2 Ibid, vol., 1134, (8-6-1801), p.p. 133-5.