பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மருது சகோதரரர்களது இந்தக் கிளர்ச்சியினால் நவாப்பின் முகவர்களும் பரங்கிகளும் பயந்து மிரண்டனர்.

இந்தக் குழப்பமான சூழ்நிலையில், சிவகங்கை சேர்வைக்காரர் சென்னையில் கும்பெனியாரது கவர்னராக இருந்த கிளைவ்விற்கு நீண்ட கடிதம் ஒன்றை வரைந்தார். அந்தக் கடிதத்தில்[1],

".. ... ... இதுவரை கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய கிஸ்திப்பணத்தைத் தவறாமல் செலுத்தி வந்து இருக்கிறேன். கும்பெனியாரது கட்டளைகளையும் பின்பற்றி வந்து இருக்கிறேன். மக்லாயிட்டுடனும், அவருக்கு அடுத்து வந்த கும்பெனி அலுவலர்களிடமும் எனது தொடர்புகள் சுமுகமாக இருந்து வந்தன. ஆனால் லூவிங்டன் பணியை ஏற்றுக் கொண்டதில் இருந்து அவரது நடவடிக்கைகளால் என்னைக் கொடு மைப்படுத்தி வந்துள்ளார். அதன் காரணமாக இப்பொழுது தங்களை அணுகி இருக்கிறேன்.

"கடந்த ஆண்டு லூஷிங்டன், இரண்டு அரிக்காரர்களை[2] என்னிடம் அனுப்பி வைத்து, காதில் குட்டி நாயக்கரைப் பல வந்தமாக நான் சிறைப்படுத்தி வைத்து இருப்பதாகவும் அவரை உடனே விடுதலை செய்து விடுமாறும் கோரிக்கை அனுப்பிவைத்தார். நான், அந்த ஆசாமியின் முகத்தைக்கூட பார்த்தது கிடையாது என்றும், அவர் இந்தச்சீமையில் எந்த இடத்திலும் இல்லை யென்றும் தெரிவித்தேன். எனது பதிலில் அவர்களுக்கு மனநி றைவு ஏற்படவில்லையென்றால் இந்தச்சீமையில் அவரை எந்த இடத்திற்கும் சென்றும் தேடிபிடித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன். மீண்டும் புதிய அரிக்காரர்களை அனுப்பி வைத்து, அவர்களும் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்துவிட்டு அவரிடம் சென்று தகவல் சொன்னதற்கு அவரே வந்து தேடிக் கண்டுபிடிப்பதாகச் சொன்னாராம்.

இந்த ஆண்டில் மட்டும் பத்து அரிக்காரர்கள் இங்கு அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் ரங்கராயர் என்பவர் ஒருவர். அவர் ஒரு தனிப்பிறவி. அவர் தமது விசாரணையில்


  1. 3. Revenue Consultations, vol. 1 10, (24-7-1801), p. 1861-69.
  2. * அரிக்காரர்-ஒற்றர்கள், பெரும்பாலும் பிராமணர்கள் இந்தப்பணியில் கியமிக்கப் பட்டு இருந்தனர்.