பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

கண்ட தகவல்களுடன் பொய்யைக் கலந்து புனைந்து உரைப்பதில் வல்லவர். ... ... ... சுருக்கமாகச் சொன்னால் அவர் எனது விஷயங்களில் தலையிட்டு பலவகைகளிலும் எனக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வந்தார். இவை அனைத்தையும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மிகவும் பொறுமையாக சகித்துக் கொண்டேன். நான் ஒளித்து வைத்து இருப்பதாகப் புனைந்து உரைக்கப்பட்ட ஆசாமியைப்பற்றி எல்லாவிதமான விசாரணைகளையும் மேற்கொண்டார்.

'கும்பெனியார் தங்களது ஆதிக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அங்கங்கே உள்ள வளமையான மரபுகளை நேர்மையான முறையில் கடைப்பிடிப்பது தான் முறையானதாகும். இவை களுக்கு முரணாக இராமநாதபுரம் கலெக்டர் அபிராமத்தில் உள்ள சிலரது போதனைகளின்படி, எனது சீமை எல்லைக்குள் உள்ள நீர்ப்பாசன வரத்துக்கால்களை நீக்கிவிட்டார். அவரது நடத்தையைப் பற்றி அந்த மக்கள் புகழ்ச்சியாகப் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக.

'முன்னாள் கவர்னர் ஹோபர்ட், எனது மகனுக்கு சென்னையில் பேட்டியளித்து பெருமைப்படுத்தினார். அந்த அனுகூலமான வரவேற்புக்கும் புகழ்ச்சிக்கும் பிறகு கலெக்டரைச் சந்தித்து அவரது ஆலோசனைகளையும் பெறுதல் நல்லது எனக் கருதப்பட்டது.

கலெக்டர் தம்மைச் சந்திக்குமாறு எனக்கு கட்டளை இட்டார். சிவகங்கை அரசுக்குரிய வம்சாவளி அட்டவணையை, எனக்கு உடல் நலமில்லாததால் அரசரது பங்காளி மூலம் அனுப்பி வைத்தேன். எனது எஜமானரது இளைய சகோதரரைத் தகுந்த அலுவலர்களுடன் அனுப்பி வைப்பதாக எழுதி இருந்தேன். அதற்குக் கலெக்டர் எனது பதிலைக்கோரி அனுப்பிய கடிதத்தைத் தங்கள் பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன்.

"பாஞசாலங்குறிச்சிப் பாளையக்காரர், தமது சுயபுத்தியுடன் கும்பெனியாருக்கு எதிராக மற்றவர்களது ராஜவிசுவாசத்தைக் குலைப்பதற்கு, பல கிராமங்களில் கொள்ளையை மேற்கொண்டுள்ளார். அதற்கு எனது பெயரையும் பயன்படுத்தி உள்ளார். இது சம்பந்தமாக கலெக்டர் தங்களுக்கு எத்தகைய முறையீடுகள் அனுப்பி இருந்தாலும் சரி, அவைகளில் கும்பெனியாரது நலனுக்கு