பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

எதிராக எவ்விதப் பங்கும் எனக்கு இல்லையென்பதை வலியுறுத்தி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த மனிதனும் தனது அழிவைத்தானே தேடிக்கொள்ள மாட்டான். இது சம்பந்தமாக முழு விசாரணையொன்றைத் தாங்கள் மேற்கொண்டால், கும்பெனியாருக்கு முழுவதும் கட்டுப்பட்டவனாக, கும்பெனியாரது நியாயத் தீர்ப்பில் நம்பிக்கை கொண்டவனாக, சாட்சியம் வழங்கச் சித்தமாக இருக்கிறேன்.

"இதுவரை இங்குப் பணியாற்றிய கலெக்டர்கள் இங்குள்ள நிலைமைகளைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப அவர்கள் நடந்து கொண்டனர். அப்பொழுதைக்கப் பொழுது வசூலிக்க வேண்டிய தொகைகளை வசூலிப்பதும், குடிமக்களைப் பாதுகாப்பதும் அவர்களது பணியாக இருந்தது. அவர்களது நடவடிக்கை களினால் குடிமக்களுடைய வளமையான வாழ்க்கை நிலைகள் பாதிக்கப்படவில்லை. அவர்களும் கும்பெனியாரது முன்னேற்றத் தில் அக்கரையுடையவர்களாக இருந்தனர். ஆனால் கலெக்டர் லூஷிங்டனது நிர்வாகம் துவங்கியதிலிருந்து நிலைமை மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் தொடர்ந்து அமைதியின்மை; முறையான தேதி வழங்கலும் இல்லை. இந்த நாட்டு மரபுகளைப் பேணுவதற்கும் அவர் தவறிவிட்டார். பலவிதமான அக்கிரமங்களைக் கையாண்டு, குடிகளுக்கு குத்தகை வழங்குவதில் பல கொடுமையான முறைகளைப் பின்பற்றினார்.

"இத்தகைய நிலைமைகளை இந்த முறையீடு போன்று அல்லாமல், விருப்பு, வெறுப்பு அற்ற ஒருவரது விசாரணை மூலம் தான் தங்களது கவனத்திற்கு கொண்டுவர முடியும். குடிகளும் அவர்களது பங்கினை,வளமையான முறையில் அடைந்தால்தான், அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சி ஏற்படமுடியும். கும்பெனி யாரது நலன்களிலும் நாட்டங்கொள்ள இயலும், லூவிங்டன் இவைகளைப் புரிந்து கொள்ளாமல் இவைகளுக்கு மாற்றமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தாங்களும் இந்த நாட்டின் மரபுகளை வெறுத்து ஒதுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

"முன்பெல்லாம், இந்தச்சீமை வக்கில்கள் கவர்னரது சமூகத்

தில் இருந்து வந்தனர். அதனால் எங்களது குறைபாடுகளை தங்களிடம் உடனுக்குடன் தெரிவிக்க முடிந்தது. தீர்வு காண