பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பாளையக்காரர்கள் அவருக்கு கட்டுப்பட்டவராக இருந்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்துவதற்கு உதாரணம் எதையும் இங்குக் குறிப்பிடவேண்டியதில்லை. ஆனால் தாங்கள் இது சம்பந்தமாக விசாரணை ஒன்றைத் துவக்கினால், அது தங்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது உறுதி".

சிவகங்கைச்சேர்வைக்காரர்களது இந்தக் கடிதம் அன்றைய பாங்கியர் எதிர்ப்பு சூழ்நிலையில் எந்த நோக்கத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது. தொடர்ந்து, பரங்கியரது நிழல் கூட தமது மண்ணில் படுவதற்கு அனுமதிக்க கூடாது என்ற வகையில் செயல் பட்டு வந்த சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இத்தகைய இயல்பான நடையில் இந்தக் கடிதத்தினைக் கும்பெனியாருக்கு ஏன் எழுதினார் ... ... ... ...? ஒரு வேளை அவர்கள் மீது துவக்கியுள்ள போர் ஆயத்தங்களை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவோ, அல்லது அவர்களது கவனத்தைத் திசை திருப்பி, கடிதப்போக்குவரத்திலும் விசாரணையிலும் சிறிது காலத்தை நீட்டிப்பு செய்யலாம் என்ற கருத்தில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.

ஆனால் கும்பெனி கவர்னர் அந்தக் கடிதத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. [1]ஏனெனில் சிவகங்கைச் சீமைக் கிளர்ச்சியினை அடக்கி அழித்து ஒடுக்குவதற்கான அனைத்து ஆயத்தங்களிலும் கும்பெனியார் முனைந்து நின்றனர். சென்னை கவர்னர் அப்பொழுது உள்ள கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்த அறிக்கை இதனைத் தெளிவுபடுத்துகிறது.[2]

... ... ... ... ...இராமநாதபுரம் பாளையத்திற்குப் பக்கத்தில் உள்ள சிவகங்கை ஜமீந்தார் பகுதிக்கு புரட்சியின் போக்கு பரவி உள்ளது. அந்த ஜமீந்தாரின் அமைச்சர்கள் இந்த மனப்பான்மையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கும்பெனியாரின் நிர்வாகத்திற்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் புரட்சியைத்


  1. 4 Revenue Consultations vol. 110- (31-7-1801) p. 1470
  2. 5 Political Consultations, vol. 5 - (1801) 1643.-44