பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

தூண்டி தங்களது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்துவிட்டு பாஞ்சாலங்குறிச்சிப் போரில் தறிபட்டு ஒடிவந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்து கும்பெனித்தளபதி அக்கினியூவின் தலைமையில் உள்ள அணிகளுடன் பகிரங்கமாகப் பொருதுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

"மருது சேர்வைக்காரரது நிலைகளைச் சென்று அடைவதற்குள்ள இடையூறுகள் அனேகம், அவை நமது அணிகளின் முன்னேற்றத்தைப் பாதிக்கும். அந்தச் சீமையின் இயற்கையான அமைப்பு. காட்டு அரண்களில் உள்ள தளவாடங்களைப் பாதுகாப்பது, கர்னல் அக்கினியூவின் உத்திகளை நிலைகுலையச் செய்ய உறுதிபூண்டு ஆயுதம் தாங்கியுள்ள பதினைந்தாயிரம் புரட்சிக்காரர்கள் ஆகிய இணக்கமற்ற சூழ்நிலைகள் ... ... "

கும்பெனியாரது நடவடிக்கைகள் பரவலாகத் தீவிரமடைந்தன. போராளிகளது தினவு எடுத்தத் தோள்களும் சும்மா இருக்கவில்லை. என்றாலும், அன்றைய அரசியல் சூழ்நிலையில் பரங்கியரைத் தனியாகவோ அல்லது கூட்டாகவோ எதிர்த்துப் போராடக்கூடிய வலிமை வாய்ந்த தலைமை தென்னகத்தில் ளங்குமே இல்லை. விடுதலை வீரன் திப்பு சுல்த்தானது வீழ்ச்சிக் எழுந்த அரசியல் சூனியம் இதுவாகும். தமிழக அரசியல் கும்பெனியார் நேரடியாகத் தலையிடும் வரை, மிகப்பெரும் அரசியல் சக்தியாக விளங்கிய ஆர்க்காடு நவாப் என்ற அரசியல் பீடமும் இப்பொழுது இல்லாது போயிற்று.